பாதசாரிகள் மீது மோதிய மோட்டார் வாகனம்: இருவர் பலி
எம்பிலிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டிய - மொரகெட்டிய பிரதான வீதியில் இலுக்கெட்டிய பிரதேசத்தில் இன்று (25.10.2023) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மூவரும் எம்பிலிப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஆண் ஒருவரும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
58 மற்றும் 71 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது வீதியோரம் நடந்து சென்ற ஆண் ஒருவர் மற்றும் இரண்டு பெண்களை விபத்திற்குள்ளாக்கிய மோட்டார் வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது.
இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற மோட்டார் வாகனத்தின் சாரதியை தேடி விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை, இன்று காலை பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில், ஜா-எலவில் இருந்து போபிட்டிய நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் வீதியில் பயணித்த 27 வயதுடைய நபர் உயிரிழதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





என் பிள்ளைகள் எனக்கு வேண்டும்... கர்நாடகா குகையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் முன்னாள் கணவர் கோரிக்கை News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
