பூமியின் மேல் அடுக்குக்கும், கடைசி அடுக்குக்கும் இடைப்பட்ட இடம்! ஆராய்ச்சியில் வெளியான தகவல்
பூமிக்கு அடியில் பெருங்கடலை விட 6 மடங்கு பெரிய மிகப்பெரிய கடல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அகழ்வாராய்ச்சி
ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள போட்ஸ்வானா நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள ஒரு பகுதியில் நடந்த அகழ்வாய்வில் வைரமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வைரமானது இதுவரை கிடைத்த வைரங்களிலேயே முற்றிலும் வேறுபட்டிருந்தமை அவதானிக்கப்பட்ட நிலையில் அதனை இயற்பியல் விஞ்ஞானிகளிடம் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒப்படைத்துள்ளனர்.
வித்தியாசமான அமைப்பைக் கொண்ட அந்த வைரத்தை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்த நிலையில் அதில் 'ரிங்வூட்டி' என்ற ஒரு வகை கனிமங்களும், கடல் நீரின் படிமங்களும் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த ரிங்வூட்டி கனிமங்கள் பூமிக்கு அடியில் சுமார் 660 கிலோமீற்றருக்கு அப்பால் உள்ள இடத்தில் இருப்பவை என்பதால் குறித்த வைரத்தை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
விஞ்ஞானிகள் ஆச்சரியம்
அதாவது, பூமியின் மேல் அடுக்குக்கும், கடைசி அடுக்குக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கும் இடமானது வெற்றிடம் என்றே விஞ்ஞானிகள் கருதி வந்த நிலையிலேயே மீட்கப்பட்ட வைரத்தில் கடல் நீர் இருந்ததை பார்த்தே விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானிகள் பூமிக்கு அடியில் ஒரு பெரிய கடல் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
எனினும் இந்த ஆராய்ச்சி ஒரு தியரியாகவே அதாவது அறிவியல் கூற்றாகவே உள்ளதாகவும் இது தொடர்பில் மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
