யாழில் ஆரம்பமான நீதிக்கு நீதி கோரி போராட்டம் (Video)
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குக் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கட்சிகளால் மனித சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.
இன்று (04.10.2023) யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் இப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சிஇ தமிழ் மக்கள் விடுதலைக் கழகம்இ தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன கூட்டாக இணைந்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
நீதித்துறையின் சுயாதீனம்
மருதனார்மடம் சந்தியில் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் மனித சங்கிலிப் போராட்டம் யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி முட்டாஸ் கடை சந்தியில் காலை 10 மணியளவில் நிறைவடையவுள்ளது.
போராட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம், யாழ்ப்பாணம் வணிகர் சங்கம், சட்டத்தரணிகள் சங்கம், சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் போராட்டத்தில் மக்கள் அனைவரும் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து எமது எதிர்ப்பைக் காட்டுவதன் மூலமே நீதித்துறையின் சுயாதீனத்தையும் நீதிபதிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.
எனவே அனைவரும் அணிதிரண்டு எமது கண்டனத்தை இலங்கை அரசுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் காட்டுவோம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
