எதிர்வரும் 7ஆம் திகதி வரை கடுமையான நிலநடுக்கம் ஏற்படும்! வெளியாகியுள்ள தகவல்
இன்றைய தினம் முதல் (02.02.2023) எதிர்வரும் மார்ச் 7ஆம் திகதி வரை கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என தகவலொன்று வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தை நெதர்லாந்து புவியியலாளர் ஃபிராங்க் ஹூனர்பெர்க் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இது பூமியின் மேலோட்டத்தின் வலுவான இயக்கங்கள் காரணமாக உணரப்படும் ஒன்றாகும் எனவும் அவர் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஈராக் புவியியலாளர் சலின் அமாதியும் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளதாக தெரியருகிறது.
49 நிலநடுக்கங்கள்

இதேவேளை நேற்றைய தினம் ரிக்டர் அளவுகோலில் 2.5 முதல் 5.4 வரையிலான 49 நிலநடுக்கங்கள் ஜப்பான், புவேர்ட்டோ ரிக்கோ, அலாஸ்கா, பிஜி, கிரீஸ், சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தென்மேற்கு பசுபிக்கில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவிற்கு அருகில் நேற்றைய தினம் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் 9 சீசன் Wild Cardல் என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல சன் டிவி நடிகை... யாரு தெரியுமா? Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri