அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் - பைடனுடன் மீண்டும் மோதும் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பைடன் மற்றும் டிரம்ப் மீண்டும் மோதுவது கிட்டதட்ட உறுதியாகி உள்ளது.
ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடனையும் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பையும் களமிறக்க அந்தந்த கட்சியினர் இடையே ஆதரவு அதிகரித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
அமெரிக்காவின் முக்கிய கட்சி
அமெரிக்காவின் முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி உள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஈடுபட்டு வருகின்றன.
அந்நாட்டில் தேர்தல் முறைப்படி ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்க மாகாணங்களில் தங்கள் கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்க தனித்தனியே தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
ஜார்ஜியா, மிசிசிபி, வாஷிங்டன் போன்ற மாகாணங்களில் நடந்த தேர்தலில் ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கவேண்டுமென்ற ஆதரவு அதிகரித்தது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலியும் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
கட்சிகளுக்குள் பெரும் எதிர்ப்பு
இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.
ஜோ பைடனை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் களமிறக்கப்படுவதும் உறுதியாகியுள்ளது.
ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க அந்தந்த கட்சிகளுக்குள் பெரும் எதிர்ப்பு இல்லாததால் இருவரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
