அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் ஆலோசனை சபையின் உறுப்பினராக இலங்கை பெண் நியமனம்!
இலங்கையை பூர்வீகமாக கொண்ட மெலனோமாவில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி புற்றுநோய் ஆராய்ச்சியாளர் அஷானி வீரரத்ன அந்நாட்டின் தேசிய புற்றுநோய் ஆலோசனை சபையின் உறுப்பினராக ஜனாதிபதி ஜோ பைடனால் நிமிக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 15ம் திகதி இந்த நியமனம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழு தேசிய புற்றுநோய் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தேசிய சுகாதார நிறுவனத்தில் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இயக்குநருக்கு ஆலோசனை மற்றும் உதவி வழங்கும்.
இலங்கையில் பிறந்து ஆப்பிரிக்காவின் லெசோதோவில் வளர்ந்த வைத்தியர் வீரரத்ன முதன்முதலில் 1988ம் ஆண்டு மேரிலாந்தின் செயின்ட் மேரிஸ் கல்லூரியில் உயிரியல் படிக்க அமெரிக்கா வந்தார்.
ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் மருந்தியல் துறையில் மூலக்கூறு மற்றும் செல்லுலார் புற்றுநோயியல் கலாநிதி பட்டம் பெற்றார்.