புலம்பெயர் இலங்கையர்களால் ஆரம்பிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி பயணம் யாழில் நிறைவு
புலம்பெயர் இலங்கையர்களால் கொழும்பில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட துவிச்சக்கர வண்டி பவனி யாழ். புத்தூர் வைத்தியசாலையை இன்றையதினம் (15) வந்தடைந்துள்ளது.
புத்தூரில் அமைந்துள்ள தூய லூகா மெதடிஸ்த திருச்சபை வைத்தியசாலையின் அபிவிருத்திக்கான நிதி சேகரிப்புக்காக இந்த துவிச்சக்கரவண்டி பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலே புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள், சிங்களவர்கள், வெள்ளையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நிதி திரட்டும் துவிச்சக்கர வண்டி பவனியில் ஈடுபட்டிருந்தனர்.
துவிச்சக்கர வண்டி பவனி
80 பேர் கடந்த 12.02.2025 அன்று கொழும்பில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நான்கு நாட்கள் பயணம் செய்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தின் புத்தூரை வந்தடைந்தனர்.
இவ்வாறு வருகை தந்தவர்கள் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி மங்கல வாத்தியங்கள் இசைக்க வரவேற்கப்பட்டனர்.
நிகழ்வு ஆரம்பமாகின்றபோது கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரும் இணைந்து கொண்டு சுமார் 10 கிலோமீட்டர்கள் தூரம் துவிச்சக்கர வண்டியில் பயணித்தனர்.
அத்துடன் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் ஒலிம்பிக் துவிச்சக்கர வண்டி போட்டியில் பதக்கம் பெற்றவரும் கலந்து கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
