வவுனியா நகரில் துவிச்சக்கரவண்டி மாயம்: பொதுமக்களின் உதவியினை நாடியுள்ள பொலிஸார்(Photos)
வவுனியா நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி திருடப்பட்டமை தொடர்பில் பொலிஸார் பொதுமக்களின் உதவியினை நாடியுள்ளனர்.
வவுனியா முதலாம் குறுக்குத்தெரு வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி நேற்று காலை 10.44 மணியளவில் இனந்தெரியாத நபரினால் திருடிச் சொல்லப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் துவிச்சக்கரவண்டி உரிமையாளர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டினையடுத்து குறித்த தனியார் நிதி நிறுவனத்தின் சீசிரீவி காணொளி உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் துவிச்சக்கரவண்டியினை திருடிச் சென்றவரின் உருவம் சீசிரீவி காணொளியில் பதிவாகியுள்ளதுடன், அவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால்? விஜய் எடுத்திருக்கும் அசாத்திய முடிவு..கசிந்த தகவல் News Lankasri