யாழ். உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு
யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பாடசாலையில் இடம்பெற்றுள்ளது.
கல்லூரி மண்டபத்தில் இன்று (06.01.2024) காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் கலந்து கொண்டார்.
கலாசார நிகழ்வுகள்
இதன்போது இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரண்டு இலட்சிணைகள், பாடல் என்பனவும் வெளியிடப்பட்டது.

மேலும், கல்லூரி மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் தென்னிந்திய திருச்சபை பேராயர் வே.பத்மதாயாளன், தென்னிந்திய திருச்சபை முன்னாள் பேராயர் ஜெபநேசன், கல்லூரி ஆசிரியர்கள், மாணவிகள், பழைய மாணவிகள், பெற்றோர், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan