விடுதலைப் புலிகள் தொடர்பாக கூட்டமைப்பு மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Tamil National Alliance
By Farook Sihan Jul 26, 2024 08:27 PM GMT
Report

பயங்கரவாத அமைப்பாக விடுதலைப் புலிகள் முத்திரை குத்தப்பட்டு, போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட காரணம் சம்பந்தர் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பே என்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொது செயலாளரும், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை, காரைதீவில் கட்சி ஆதரவாளர்களை சந்தித்து பேசியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக வெற்றிகளை பெற்றிருந்த நிலையில், அவர்களை அரசியல்மயப்படுத்துகின்ற பொறுப்பு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அஞ்சல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அஞ்சல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

பொதுத் தேர்தல்

அவர்கள் அந்த பொறுப்பை சரியாக செய்தார்களா? விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்டு முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட காரணம் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பே ஆகும்.

விடுதலைப் புலிகள் தொடர்பாக கூட்டமைப்பு மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Bhupalapillai Prasanthan Accused Tna

காலம் காலமாக தமிழ் மக்கள் தேர்தல்களில் தவறாமல் வாக்களித்து வருகின்றனர். ஆனால் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று வந்திருக்கின்ற தலைவர்கள் ஒழுங்காக பொறுப்புகளை செய்யவில்லை.

இதற்கு மிக நல்ல உதாரணம் அம்பாறை மாவட்டம் ஆகும். அதே நேரத்தில், தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இழக்கப்படக் கூடாது என்பதால் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி இங்கு போட்டியிடவில்லை.

வேட்பாளர்கள் 

அதனால்தான் மிக மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய பட்டியல் ஆசனத்தை தவற விட்டோம். அடுத்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நிச்சயம் போட்டியிடும்.

அம்பாறை மாவட்டத்தில் இருந்து வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்பதுடன் வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட மாட்டார்கள்.

விடுதலைப் புலிகள் தொடர்பாக கூட்டமைப்பு மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Bhupalapillai Prasanthan Accused Tna

மாவை சேனாதிராஜா இங்கு வந்து போட்டியிட்டு விட்டு சென்றார். அம்பாறை மாவட்டத்துக்கு வந்து வாக்குகளை பெற்று விட்டு சென்றவர்களை தேடிதான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது.

அடுத்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தது இரு ஆசனங்கள் எமக்கு கிடைக்கும். அம்பாறை மாவட்டத்தில் இருந்து இன்னொரு ஆசனம் தமிழ் மக்கள் விடுதலை கட்சிக்கு கிடைக்கின்றபோது அது அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கான விடிவெள்ளியாக அமையும்” எனக் கூறியுள்ளார்.

தேர்தல் அறிவிப்பு அபிவிருத்திசார் கூட்டங்களை நடத்துவதற்கு இடையூறாக அமையாது: டக்ளஸ்

தேர்தல் அறிவிப்பு அபிவிருத்திசார் கூட்டங்களை நடத்துவதற்கு இடையூறாக அமையாது: டக்ளஸ்

சுதந்திரக்கட்சியின் கூட்டத்திற்கு முச்சக்கரவண்டியில் வந்த முன்னாள் ஜனாதிபதி

சுதந்திரக்கட்சியின் கூட்டத்திற்கு முச்சக்கரவண்டியில் வந்த முன்னாள் ஜனாதிபதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US