முடிவை மாற்றிக்கொண்டார் பானுக!
பானுக ராஜபக்ச தனது ஓய்வுக் கடிதத்தை மீளப் பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மொஹான் டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனவரி 03 அன்று பானுக ராஜபக்ச, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை எழுத்து மூலம் இலங்கை கிரிக்கெட்டிற்கு அறிவித்திருந்தார்.
அவரது அறிவிப்பைத் தொடர்ந்து, லசித் மலிங்க உள்ளிட்ட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பானுகவிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையிலேயே, பானுக ராஜபக்ச தனது ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri