இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக மகஜர் கையளிப்பு
‘Beyond the struggle’ என்ற அமைப்பினர் கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரொன்றை கையளித்துள்ளனர்.
குறித்த நடவடிக்கை இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்
இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதற்கு எதிராகவுமே இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் முதல் காலிமுகத்திடல் பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்த நிலையில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து அப்பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
