சுற்றுலா பயணிகளிடமிருந்து கொரோனா வைரஸ் மக்களுக்கு பரவுவதை தடுப்பதற்கான சிறந்த வழிமுறை அறிமுகம்
இலங்கைக்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து கொரோனா வைரஸ் உள்ளூர் மக்களுக்கு பரவுவதை தடுப்பதற்கான சிறந்த வழிமுறை அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக இலங்கையின் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் மத்தியில் இன்று இதனை அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 26 முதல் வெளிநாட்டினரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டம் அமுல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு வருவதற்கு சில சாதகமான அறிகுறிகளைக் காண்பிக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் துறையை நம்பியுள்ள கிட்டத்தட்ட இருபது லட்சம் மக்கள், கடந்த எட்டு மாதங்களாக தமது வாழ்வாதாரத்தில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு சுற்றுலாத்துறையின் புதிய ஏற்பாடுகள் உதவும்.எனவே, இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை முறையான பொறிமுறையின் கீழ் கொண்டு வருவது சுற்றுலாத்துறையை உயர்த்தும் என்று நம்புவதாகவும் இராணுவத்தளபதி கூறியுள்ளார்.