ஆசியாவின் சிறந்த சுற்றுலா ஓய்வு விடுதிகள்: இலங்கையிலுள்ள விடுதிக்கு கிடைத்த இடம்
2022 ஆம் ஆண்டில் ஆசியாவின் மூன்று சிறந்த சுற்றுலா ஓய்வு விடுதிகளின் பட்டியலில் இலங்கையிலுள்ள கேப் வெலிகம சுற்றுலா ஓய்வு விடுதியும் இடம்பிடித்துள்ளது.
“கான்டே நாஸ்ட் டிராவலர் ” என்ற சுற்றுலா துறை தொடர்பிலான தகவல்களை வெளியிடும் இதழ் இதனை வெளியிட்டுள்ளது.
வாசகர்கள் தெரிவு விருதுகள்
ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட குறித்த பத்திரிக்கையின் வாசகர்களினால் தெரிவு செய்யப்படும் “வாசகர்கள் தெரிவு விருதுகள்” இல் இலங்கைக்கு 99.05 புள்ளிகள் கிடைக்கப்பெற்ற நிலையில் 3 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டது.
இதில் 99.69 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தை சிக்ஸ் சென்ஸ் நின் வான் பே வியட்நாமும் 99.23 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை சிக்ஸ் சென்ஸ் பூட்டானும் பிடித்துள்ளன.
கேப் வெலிகம
கேப் வெலிகம என்பது இலங்கையின் கடலை அண்டிய பகுதியில் உள்ள ஓர் உயர்ந்த பகுதியில் உள்ள ஒரு சொகுசு சுற்றுலா ஓய்வு விடுதி ஆகும்.
இது கடந்த 2014 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட சுற்றுலா ஓய்வு விடுதியாகும்.
12 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கும் கடல் முகப்பு சுற்றுலா ஓய்வு விடுதி ஆகும்.
இங்கு உலகின் ஏழு வகையான கடல் ஆமைகளில் ஐந்து வகையைச் சேர்ந்தவை இந்த கடற்கரையோரத்தில் காணப்படுகின்றன.
இந்த விடுதி அமைந்துள்ள பகுதியில் நீலத் திமிங்கலங்கள் கடலுக்கு ஒரு மைல் தொலைவில் காணப்படுகிறது.
இந்த சுற்றுலா ஓய்வு விடுதி அரிதான செட்டாசியன் (cetaceans) திமிங்கலங்கள் ஆர்வலர்களின் சொர்க்கமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.