சுவிட்சர்லாந்தில் ஈழ தமிழர்களுக்கு இடையே உள்ள சர்ச்சைகள்! நந்தினி வெளிப்படுத்தும் உண்மைகள் பல (VIDEO)
சுவிஸ் நாட்டை பொறுத்தவரையில் சுவிஸில் இயங்கும் அனைத்து தமிழ் பாடசாலைகளும் தனியார் பாடசாலைகளாகும். எனவே பாடசாலைகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும் என சுவிஸ் நாட்டின் பிரதான மொழிப்பெயர்ப்பாளரும்,சமூக செயற்பாட்டாளருமான முருகவேல் நந்தினி தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து - பேர்ண் வள்ளுவன் பள்ளி தைப்பொங்கல் சிறப்பாக நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் பேர்ண் நகர முதல்வர் Alec von Graffenried முதன்மை விருந்தினராக பங்கேற்று விழாவினை தொடங்கி வைத்துள்ளதுடன்,தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்த வ.மு.சே.திருவள்ளுவர் சிறப்பு விருந்தினராக தலைமை தாங்கியுள்ளார்.
இதன்போது சுவிஸ் நாட்டின் பிரதான மொழிப்பெயர்ப்பாளரும்,சமூக செயற்பாட்டாளருமான முருகவேல் நந்தினி சுவிட்சர்லாந்தில் ஈழ தமிழர்களுக்கு இடையே உள்ள சர்ச்சைகள் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,
எமது மக்களை பொறுத்தமட்டில் தகவல்களை பரப்பும் போது அந்த தகவல் தவறானதெனில் அதனை பரப்புவதினை தவிர்க்க வேண்டும்.இவ்வாறான பொருத்தமற்ற கருத்துக்களினால் மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகும் போது அவை குற்றமாக கருதப்படுகின்றது.
மேலும், தவறான கருத்துக்களையும், தவறான முறைப்பாடுகளையும் மக்கள் மத்தியில் பரப்புவது தவறானதொன்று. எனவே எதுவும் தெரியாத பட்சத்தில் சில தெரிந்த விடயங்களையும் பரப்புவது தவறான குற்றமாகும்.
தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் அடுத்த பிரச்சினையாக நேரம் தவறுகின்றமை பார்க்கப்படுகின்றது.
மேலும் நேரத்திற்கு செல்வது நேரத்தினை கடைப்பிடிப்பது எம் மக்கள் மத்தியில் வெகுவாக குறைந்துள்ளது.அவை எமது தமிழினத்திற்கு நாம் வாங்கி கொடுக்கும் தவறான பெயர் ஆகும். அவை பிள்ளைகளுக்கும் கடத்தப்படுகின்றது.
எனவே தமிழ் மக்களை பொறுத்தவரையில் இவை அனைத்தும் முறையாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாகும் என்றும் தெரிவித்துள்ளார்.