வெகு சிறப்பாக இடம்பெறும் பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலய தேர்த்திருவிழா (Live)
ஜேர்மனி - பேர்லின் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயத்தின் தேர்த்திருவிழா தற்போது சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2ஆம் திகதி பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலய மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது.
இந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி கார்த்திகைத் திருவிழா இடம்பெற்றிருந்ததுடன், கடந்த 22ஆம் திகதி மாம்பழத் திருவிழாவும் வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
இதேவேளை நேற்று முன் தினம் வேட்டைத் திருவிழா நடத்தப்பட்டிருந்ததுடன், இன்றைய தினம் தேர்த்திருவிழா பெருந்திரளான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
அத்துடன் நாளைய தினம் தீர்த்தத்திருவிழாவும், நாளை மறுதினம் திருக்கல்யாணமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.