வீடமைப்புத் திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவில் அரசியல் தலையீடுகள் இல்லை:வடக்கு ஆளுநர்
தற்போது மாகாண சபையால் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இன்றி, முற்றுமுழுதாக சுயாதீனமாகவும் வெளிப்படைத்தன்மையுடன் நாம் செயல் பட்டிருக்கின்றோம், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, 'தேசிய வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டம் - 2026' எனும் தொனிப்பொருளின் கீழ் மாகாண சபைகளின் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாடு முழுவதும் நேற்று வியாழக்கிழமை (12) நடைபெற்றது.
இதற்கமைவாக, வடக்கு மாகாணத்திற்குரிய ஆரம்ப நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
நிதி
அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் வீடற்றவர்கள் என்று எவருமே இருக்கக் கூடாது என்பதுதான் தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கொள்கையாக உள்ளது. இதனைப் பல்வேறு அமைச்சுக்களும் மாகாண சபைகளும் ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இந்த ஆண்டு 31,000 வீடுகள் இவ்வாறு அமைக்கப்படவுள்ளன. வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக நாம் முன்னெடுக்கும் இந்த வீட்டுத்திட்டத்தில், எங்கு தேவைப்பாடுகள் அதிகமாக உள்ளனவோ அங்கு முன்னுரிமை வழங்கியுள்ளோம்.
வீட்டுத்திட்டங்கள் கோரி எனக்குக் கிடைக்கப்பெறும் கோரிக்கைகளை உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி, அவர்கள் பொருத்தமான பயனாளிகள் தானா என்பதைக் களப் பயணங்கள் ஊடாக உறுதிப்படுத்திய பின்னர் வீடுகளை வழங்குகின்றோம்.
பயனாளிகள் தெரிவு
அத்துடன், பிரதேச செயலாளர்கள் ஊடாகவும் அதனை மேலதிகமாக உறுதிப்படுத்துகிறோம். இவ்வாறு மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் பயனாளிகள் தெரிவு இடம்பெற்றுள்ளது.

நான் மாவட்டச் செயலாளராக பணியாற்றிய காலங்களில் வீட்டுத்திட்டங்களுக்குரிய பயனாளிகள் தெரிவு செய்யும் போது பல்வேறு அரசியல் தலையீடுகள் இருந்தன.
ஆனால், தற்போது மாகாண சபையால் நடைமுறைப்படுத்தப்படும் வீடமைப்புத் திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இன்றி, முற்றுமுழுதாக சுயாதீனமாகவும் வெளிப்படைத்தன்மையுடன் நாம் செயல் பட்டிருக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான்.. மீண்டும் என்ட்ரி கொடுத்த கதாபாத்திரங்கள்.. Cineulagam
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan