ஜனாதிபதிக்கு அறிவுரை வழங்கிய சாமர! திரைக்குப் பின்னால் நடந்த உரையாடல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று பிற்பகல் நாடாளுமன்றுக்கு சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட வருகைத்தந்திருந்தார்.
அந்த நேரத்தில், ஜனாதிபதி தனது உரையை நிகழ்த்த வந்தபோது திரைக்குப் பின்னால் நடந்த உரையாடல் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதில், மாதங்களை பெயரிட்டு அரசாங்கங்களை கவிழ்ப்பதாக சில அரசியல் தலைவர்கள் தெரிவித்த அறிக்கைகளை ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க,
அரசாங்கங்களை கவிழ்க்கும் எண்ணம்
"ஜனாதிபதியே, அரசாங்கங்களை கவிழ்க்கும் எண்ணம் இப்போது இல்லை. நாங்கள் அதை சிறிது ஒத்திவைத்துள்ளோம். 2027 இல் அவற்றை கவிழ்ப்போம்.
ஆனால், உங்கள் அமைச்சர்களின் வாயை மூடியிருக்காவிட்டால், அதற்கு முன்பே அரசாங்கம் கவிழ்க்கப்பட்டிருக்கும்” என்றார்.
விமான நிறுவனத்தின் பல்வேறு நடவடிக்கைகளைப் பாதுகாக்க சில தரப்பினர் பாடுபடுவதாகக் கூறப்படும் தகவல்கள் குறித்தும் அவர் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்ததாகக் கூறப்படுகிறது.
சாமர சம்பத்
மேலும், இளைஞர் கழகங்களை நிறுவும் முறை குறித்து நேற்று நடைபெற்ற போராட்டம் குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன.
அப்போது பொலிஸார் அங்கு இல்லை என்று ஜனாதிபதி கூறியிருந்தார். அந்த நேரத்தில், சாமர சம்பத் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், இவை எதிர்க்கட்சியினரின் செயல்பாட்டினால் அல்ல, உங்கள் சொந்த மக்களின் செயல்பாட்டினால் எழுந்த போராட்டங்கள் என்று மீண்டும் ஜனாதிபதியிடம் கூறியுள்ளனர்.
இதைக் கேட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள், ஜனாதிபதி பதில் அளிக்காமல் சைகை செய்ததாகக் கூறியுள்ளனர்.



