வவுனியாவில் ஆசிரியர்களுக்கான இரண்டாம் டோஸ் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்
வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு இரண்டாம் டோஸ் கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று (10.09) வவுனியா தெற்கு மற்றும் வவுனியா வடக்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், கல்வி சார் உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோருக்கு இவ்வாறு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன.
சுகாதாரப்பிரிவினரின் ஏற்பாட்டில் ஒரு நாளில் 500 பேருக்கு இதன்போது தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆசிரியர்கள் ஆர்வத்துடன் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டமையை இதன்போது அவதானிக்க முடிந்தது.
அத்துடன், அதிகளவிலான ஆசிரியர்கள் முதல் நாளிலேயே தடுப்பூசிகளைப் பெறுவதற்கு வருகை தந்தமையால் நீண்ட வரிசையில் காத்து இருந்தமையையும் அவதானிக்க முடிந்தது.











அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 16 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
