வவுனியாவில் டெங்கு நுளம்பை தேடி அழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்(Video)
நாட்டில் பரவலாக அதிகரித்துச் செல்லும் டெங்கு நுளம்பு தொற்றாளர்கள் இனங்காணப்படுவதை அடுத்து வவுனியா நகரில் சுகாதாரத்துறையினால் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்று (09) காலை குருமன்காடு பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மக்கள் குடியிருக்கும் பகுதிகள் அனைத்தும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு கட்டங்களாக இடம்பெறும் இந்நடவடிக்கையின் அறிக்கை சுகாதார பரிசோதகர்களிடம் கையளிக்கப்பட்டு டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு அவ் அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்தத்தவறும் நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
எனவே வர்த்தக நிலையங்கள் , மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் காணப்படும்
பிளாஸ்டிக் போத்தல்கள், யோக்கட் கப் பொலித்தீன் என்பன தேடி அழிக்கப்பட்டு
உங்களது பகுதிகளைச் சுத்தமாக வைத்திருந்து டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும்
நடவடிக்கைக்குப் பொதுமக்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.




உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri