இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயற்சித்த பீடி இலைகள் பறிமுதல்(Photos)
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயற்சித்த பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் மூவாயிரம் கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பீடி இலைகள் பறிமுதல்
தூத்துக்குடியை சேர்ந்த கடலோர காவல் படைக்கு சொந்தமான வஜ்ரா என்ற ரோந்து கப்பல் நேற்று பிற்பகல் நடுக்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த வேளை ரோந்துக் கப்பலை பார்த்த நாட்டு படகு ஒன்று வேகமாக சென்றுள்ளது.
இதனை தொடர்ந்து சென்ற கடலோர காவல் படையினர் நாட்டுப் படகை சுற்றி வளைத்து சோதனை செய்ததில் அதில் மூன்று 3000கிலோ பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் படகில் ஆறு கடற்தொழிலாளர்கள் இருந்துள்ளதுடன் விசாரணையில் அவர்கள் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு இந்த பீடி இலைகளை கடத்திச் சென்றுள்ளனர்.
விசாரணை
கடலோர காவல் படையினர் விசாரணைக்கு பின் நாட்டுபடகுடன் ஆறு கடற்தொழிலாளர்களையும் கைது செய்து தூத்துக்குடி பழைய துறைமுகம் கொண்டு சென்று கடலோர பாதுகாப்பு குழும பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் கடத்தலில் ஈடுபட்ட ஆறு கடற்தொழிலாளர்களிடம் விசாரணை
நடத்தி கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் கடற்தொழிலாளர்களை சுங்கத்துறையினரிடம்
ஒப்படைத்துள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
