யாழில் அழகுக்கலை நிலையங்களில் நடைமுறைப்படுத்தவுள்ள கடுமையான கட்டுப்பாடுகள்

Jaffna Sri Lanka Beauty
By Theepan Jan 09, 2024 04:15 PM GMT
Report

யாழ்.மாவட்டத்தில் அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும், அழகு கலை சார்ந்த பயிற்சி நெறிகளை நடத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை உள்ளூராட்சி சபைகளோடு இணைந்து நடைமுறைப்படுத்த உள்ளதாக யாழ். மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியத்தின் தலைவர் பிரதீபா டினேஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியம் யாழ். ஊடக மையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஒன்றியத்தின் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்

அழகுக்கலை நிலையங்கள்

“அண்மைக் காலங்களில் யாழ்ப்பாணத்தில் அழகுக்கலை தொடர்பான அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் எதுவும் இன்றி புதிய அழகுக்கலை நிலையங்கள் பரவலாக திறக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதுமட்டுமின்றி யாழ்ப்பாணம் தவிர்ந்த பிரதேசங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்து யாழ்ப்பாணத்தில் புதிய அழகுக்கலை நிலையங்கள் திறக்கப்படுவது மட்டுமில்லாமல் அழகுக்கலை சார்ந்த குறுகிய கால பயிற்சிப் பட்டறைகளும் தொடர்ச்சியாக நடத்தப்படுகின்றன.

யாழில் அழகுக்கலை நிலையங்களில் நடைமுறைப்படுத்தவுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் | Beauty Salons In Jaffna District

இதனால் எமது உள்ளூர் அழகுக்கலை ஆர்வம் கொண்ட மாணவர்களும், அழகுக்கலை நிபுணர்களும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே யாழ். அழகுக்கலை நிபுணர்கள் குறித்த கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

எமது ஒன்றியத்தில் யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற 120க்கும் மேற்பட்ட அழகுக்கலை நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

யாழில் அழகுக்கலை நிலையங்களில் நடைமுறைப்படுத்தவுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் | Beauty Salons In Jaffna District

இந்த ஒன்றியமானது யாழ். மாவட்ட செயலகத்தில் பதிவு செய்யப்பட்டு மாவட்ட செயலகத்தின் வழிநடத்தலில் இயங்கி வருகின்றது.

இந்நிலையில் அழகுக்கலை தொழில் என்பது சருமங்கள், தோல் சார்ந்த சுகாதார விடயங்களோடு சம்பந்தப்படுவதால் உள்ளூராட்சி மன்றங்களின் சுகாதார பிரிவினரோடு இணைந்து அதற்கான அனுமதி வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

யாழில் அழகுக்கலை நிலையங்களில் நடைமுறைப்படுத்தவுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் | Beauty Salons In Jaffna District

வியாபார சான்றிதழ்

குறிப்பாக அழகுக்கலை நிலையம் ஒன்றை திறப்பதற்கான வியாபார அனுமதியை வழங்குகின்ற பொழுது குறித்த நிலையத்தின் உரிமையாளர் NVQ level 4 சான்றிதழை பெற்றிருப்பது கட்டாயமானது.

இதனை பரிசீலித்தே வியாபார சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளோம்.

யாழில் அழகுக்கலை நிலையங்களில் நடைமுறைப்படுத்தவுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் | Beauty Salons In Jaffna District

எனவே இந்த விடயங்களை அனைவரும் கருத்தில் கொண்டு செயல்படுமாறும் அழகுக்கலை பயிற்சி நெறிகளை நடத்துவதென்றால் வகுப்பறை கட்டமைப்பு கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் எனவும் யாழ். மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ஒன்றியம் தீர்மானித்துள்ளது ”என கூறியுள்ளார்.

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் : அமைச்சர் கஞ்சன

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் : அமைச்சர் கஞ்சன

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US