இலங்கையில் வாழ்ந்த அழகான கொலைகார அரக்கிகள்! ஆரியர்களின் தந்திரமா?
இலங்கை தொடர்பாக பண்டைய காலத்தில் இருந்து தற்போது வரை சர்வதேச ரீதியில் பல்வேறு விதமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவற்றில் நல்லவையும் இருக்கின்றன. மோசமான பிரசாரங்களும் அடங்குகின்றன.
பண்டைய காலத்தில் தம்பபன்னி என அழைக்கப்பட்ட இலங்கை தேசம் மனித மாமிசம் உண்ணும் ஆபாச அரக்கிகள் வாழ்ந்த நாடு என்று பண்டைய காலத்தில் இலங்கை சர்வதேச ரீதியில் பிரசித்தி பெற்றிருந்தது.
குருணாகல் இராஜதானி காலத்தில் எழுதப்பட்ட கர்ண பரம்பரை கதைகளில் இடம்பெற்ற கதை ஒன்று இதற்கு சிறந்த உதாரணம். இதனடிப்படையில் இலங்கை ஒரு காலத்தில் சொர்க்காபுரி போல் அழகாக இருந்தாலும் ஆண்களை கொன்று திண்ணும் ஆபாச அரக்கிகள் நிறைந்த நாடு.
கடல் வழியாக இலங்கைக்கு வரும் வணிக குழுக்களை தந்திரமாக ஏமாற்றும் இந்த அரக்கிகள், மற்றுமொரு வணிக கப்பல் இலங்கைக்கு வரும் முன்னர், கப்பலில் வந்த வணிக மாலுமிகளை கொன்று உண்டு விடுவார்கள்.
அதேபோல் கடலில் பயணிக்கும் வணிக கப்பல்கள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கும் அவர்கள் நாகதீபம் முதல் களனி வரையான கடல் பகுதிகளை கண்காணித்துக்கொண்டிருப்பார்கள் என கர்ண பரம்பரை கதைகளில் கூறப்பட்டுள்ளது.
எனினும் “சிங்கள” என்ற இந்திய வணிகன் தலைமையிலான 500 மாலுமிகளுடன் கூடிய கப்பல் தம்பபன்னியில் தரை தட்டிய போது, அதே பாணியில் அவர்களை கொலை செய்ய திட்டமிட்ட அரக்கிகளுக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
“சிங்கள” இந்திய தலைமை வணிகனின் தந்திரமே இதற்கு காரணம். கி.மு.1302 -1326 இடையிலான காலத்தில் சமூகத்தில் பரவி இருந்த கதைகளை அடிப்படையாக கொண்டு இந்த புராண கதை எழுதப்பட்டிருக்கலாம் என்றாலும் இதனை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த கதைகள் இலங்கை தொடர்பில் சர்வதேச ரீதியில் பரவி இருந்த நம்பிக்கை என அறிய முடிகிறது.
கி.பி.629-645 இடையிலான காலத்தில் இமயலையை தாண்டி பண்டைய இந்தியாவில் (அப்போது பல நாடுகள்) பயணம் மேற்கொண்ட சீன பயணியான துறவி ஹியூ சியங் (Xuanzang) தனது பயண குறிப்புகளில் பண்டைய கால இலங்கை தொடர்பான தொன்மத்தை விபரமாக விபரித்துள்ளார்.
இந்த பயணத்தின் போது அவர் இலங்கைக்கு வருகை தராவிட்டாலும் அவர் எழுதிய குறிப்புகளில் 11 வது அத்தியாயம் இலங்கையை அடிப்படையாக கொண்டது. சிங்கபாகுவின் கதையை சில மாற்றங்களுடன் எழுதியுள்ள அந்த அத்தியாயத்தில், இலங்கையில் வாழ்ந்ததாக கூறப்படும் பிணம் திண்ணும் ஆபாச அரக்கிகள் செய்தியும் மிக விபரமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வந்து இங்கு வாழும் அரக்கிகளை திருமணம் செய்துகொண்ட சிங்கள என்ற வணிக தலைவர் உட்பட 500 பேருக்கு அரக்கிகள் மூலம் பிள்ளைகள் பிறந்துள்ளன.
இவர்கள் அரக்கிகள் என அறிந்துகொண்ட பின்னர், இந்தியாவுக்கு தப்பிச் சென்ற சிங்கள என்ற வணிக பிரதானி உட்பட 500 பேரை பின் தொடர்ந்து சென்ற சிங்கள என்ற வணிக பிரதானியை திருமணம் செய்துகொண்ட தலைமை அரக்கி, இந்திய நாட்டின் மன்னர் மற்றும் அரச குடும்பத்தினரை கொன்று திண்றதாகவும் பின்னர் இந்த செய்தியை மக்களுக்கு கூறிய சிங்கள என்ற அந்த வணிகன் நாட்டின் அரச பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் பயண குறிப்பின் 11 வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் இலங்கை தொடர்பான இந்த கெட்டபெயர் சர்வதேச தளத்திற்கு சென்றிருந்தது என்பதை எம்மால் தெளிவாக கூற முடியும். Xuanzang இந்த சிங்கள வணிகன் தொடர்பான கதையை தென்னிந்திய நாடுகளில் கேட்டு அறிந்திருக்கின்றார் என்பதே இதற்கு காரணம்.
எந்த கால கட்டத்தில் எமது நாட்டை பற்றிய மோசமான விம்பம் சர்வதேச அளவில் பரவியது?. இது நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விடயம். பண்டைய இந்தோ - ஆரிய சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருந்து. அது வேதங்கள் ஆதிக்கம் செலுத்தும் ஆணாதிக்க சமூகம் என்பது இரகசியமான விடயமல்ல.
எனினும் இந்தியாவின் ஆணாதிக்க சமூக அமைப்பு இல்லாத தாய்வழிச் சமூக அமைப்பு பண்டைய காலத்தில் இலங்கையில் இருந்துள்ளது!.
இலங்கையில் வரலாற்று இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது போல், விஜயன் உட்பட ஆரியர்கள் இலங்கையில் தரை இறங்கிய போது, இங்கு ஆட்சி செய்தது கறுத்த மோசமான நிறத்தை கொண்ட பெண் என்ற அர்த்தத்தை கொடுக்கும் குவேனி என்ற இயக்கர் குல இராணி.
இதன் அடிப்படையில் எமது நாட்டில் பண்டைய காலம் தொட்டு இருந்து வந்த பெண்களை அடிப்படையாக கொண்ட சமூக கலாசாரத்தையும் நாகரீகத்தையும் அழிக்கும் தேவை இந்திய ஆரியர்களுக்கு இருந்தது என்பது இந்த பிணம் திண்ணும் அரக்கிகள் என கதை மூலம் தெளிவாகின்றது.
பண்டைய காலம் முதல் இலங்கை மாணிக்கம், இரத்தினம் உட்பட பெறுமதியான கனிய வளங்களால் செல்வ செழிப்பான நாடாக இருந்தது என மேற்குலகின் பண்டைய வெளிநாட்டு ஆவணங்கள் பலவற்றில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கை மிகவும் முன்னேறிய நாகரீக கலாசார அடையாளங்களை கொண்ட அழகிய பெண்கள் இருந்தனர் என்பது சந்தேகமில்லை. பெறுமதியான இந்த இயற்கை வளங்கள் மற்றும் அழகிய பெண்கள் தொடர்பிலும் நாடு பற்றியும் வெளிநாட்டவர்கள் மத்தியில் வீணான அச்சத்தை ஏற்படுத்தி அவர்கள் இலங்கைக்கு வருவதை தடுக்கும் தந்திரமான வழிமுறையாக இந்த புனைகதையை பரப்பி இருக்கலாம் அல்லவா?.
வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வந்து இங்குள்ள பெண்களை மணமுடித்து அதன் மூலம் புதிய கலாசாரத்தையும் நாகரீகத்தை உருவாக்குவார்கள் என அறிந்தவர்கள், இலங்கை பெண்கள் தமது கணவனை கொன்று திண்ணும் அரக்கிகள் என்று பிரசாரம் செய்திருக்கலாம்.
புராண கதைகளின்படி தம்பபன்னியில் வாழ்ந்த அரக்கிகள் இந்தியாவில் இருந்து வரும் வணிக கப்பல்களின் மாலுமிகளை வசப்படுத்த நாய், கோழி போன்ற வளர்ப்பு விலங்குகளையும் உருவாக்குகின்றனர்.
பல்வேறு அடையாளங்களுக்காக கொடிகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த புனைகதைகள் ஒரு புறமிருக்க, நாம் அன்றைய காலத்தில் சிறந்த நாகரீகம் மற்றும் கலாசாரத்தை கொண்டவர்களாக இருந்துள்ளோம் என்பது தெரிகிறது.
புராண கதைகள் கூறுவது போல் நாட்டின் மேற்கு கரைக்கு வரும் வணிக கப்பல் மாலுமிகளை ஏமாற்ற தயாராக இருந்த அழகிய பெண்கள் யார்?. எமது நாட்டிற்குள் இருந்து வெளியில் செல்லும் கப்பல்களை கொள்ளையிடும் கொள்ளைக்கார்களில் தூதுவர்களாக கூட இருந்திருக்கலாம்?.
இவை அனைத்தையும் சரியாக தற்போது அறிய முடியாது. இதனால், இலங்கையில் வாழ்ந்ததாக கூறப்படும் பிணம் திண்ணும் ஆபாச அரக்கிகள் என்ற புராண புனைகதைகளின் உண்மையான பின்னணி இதுவாக கூட இருந்திருக்கலாம்.
மூலம் - LNW
மொழியாக்கம் - ஸ்டீபன் மாணிக்கம்

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
