ஆயிரம் ரூபாவை நெருங்கும் போஞ்சியின் விலை
ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 900 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலவும் சீரற்ற காலநிலையினால் போஞ்சி உள்ளிட்ட சில காய்கறிகளின் விலை சந்தையில் மேலும் அதிகரித்துள்ளது.
இதேவேளை, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் லீக்ஸ் 150 முதல் 170 ரூபாய்க்கும் இடைப்பட்ட விலையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
காய்கறிகளின் விலை
தம்புள்ளை பொருளாதார நிலையத்தில் தக்காளியின் மொத்த விலை 200 முதல் 300 ரூபா வரையிலும், பச்சை மிளகாய் 190 முதல் 200 ரூபா வரையிலும், கத்தரிக்காய் 200 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றும் சந்தையில் நாடு அரிசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக நுகர்வோர் கடும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam