மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை ஏற்றும் பெருமளவான இளைஞர் யுவதிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 20வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுவரும் நிலையில் பெருமளவான இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை ஏற்றி வருகின்றனர்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகளில் இன்றைய தினம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு கூழாவடி விக்னேஸ்வரா திருத்தொண்டர் மண்டபத்தில் இத்தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரனின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதனின் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி, கல்லடி சிவானந்தா வித்தியாலயம் ஆகிய பகுதிகளிலும் 20வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
பெருமளவான இளைஞர் யுவதிகள் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதற்கு ஆர்வத்துடன் கலந்து கொண்டதைக் காணமுடிந்துள்ளது.
அத்துடன் இதுவரையில் எந்த தடுப்பூசிகளைப்பெற்றுக்கொள்ளாத மற்றும் இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத 30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.












6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam
