தமிழர் பகுதியில் நான்கு வீடுகளில் ஒரே நாளில் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை
மட்டுக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவு மற்றும் காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட நான்கு வீடுகள் ஓரே நாளில் உடைக்கப்பட்டு அங்கிருந்து 28 பவுண் தங்க ஆபரணங்கள் 2 இலச்சத்து 83 ஆயிரம் ரூபா பணம் மடிகணணி மற்றும் மணிக்கூடு போன்ற பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
இத்திருட்டு சம்பவம் நேற்று (29.10.2022) இடம்பெற்றுள்ளதாக அப்பிரதேச பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தங்க ஆபரணங்கள் திருட்டு
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாளங்குடா பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான சனிக்கிழமை அதிகாலை வீட்டின் உரிமையாளர் ஆழ்ந்த நித்திரையில் இருந்துள்ள நிலையில் யன்னலை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 8 அரை பவுண் தங்க ஆபரணங்களையும் 33 ஆயிரம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள இராசதுரை கிராமத்திலுள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்துவரும் பெண் ஒருவர் வீட்டை பூட்டிவிட்டு பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக சந்தைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த 5 பவுண் தங்க ஆபரணங்களையும் 2 இலச்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பாரதி வீதியிலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் வைத்தியசாலையில் உள்ள நிலையில் அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு வைத்தியசாலைக்கு சென்று திரும்பி வந்தபோது வீட்டின் கதவை உடைத்து 22 இலச்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான 14 பவுண் தங்க ஆபரணங்கள் திருடிச்செல்லப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
அதனை தொடர்ந்து பார்வீதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து 4 இலட்சத்து 31 ஆயிரம் ரூபா பெறுமதியான மடிகணணி, மணிக்கூடு, கையடக்க தொலைபேசி போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக அந்த பகுதிகளில் உள்ள சிசிரி கமராவில் திருடர்கள் பதிவாகியுள்ளதுடன் அவர்களை அடையாளங்கண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த 4 வீடு உடைப்பு சம்பவங்களும் ஒரே குழுவைச் சேர்ந்த திருடர்களால் அதிகாலை 4 மணியில் பகல் 1 மணிவரையில் வீடுகளை உடைத்து திருடியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது
சம்பவத்துடன் தொடர்புடைய திருடர்களை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மட்டு. கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்கேணி 3ம் குறுக்கு
வீதியிலுள்ள வீட்டின் கூரையை உடைத்து உள் நுழைந்த
திருடர்கள் அங்கு அலுமாரியில் இருந்த தலா 3 பவுண்கள் கொண்ட 6 பவுணுடைய இரண்டு
தாலிக் கொடிகளை திருடிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
