வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலய மகோற்சவம்: பக்தர்கள் புடைசூழ எட்டு நாள் பாதயாத்திரை(Photos)
மட்டக்களப்பு மாவட்ட வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்திற்கான எட்டு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரை நிறைவடைந்துள்ளது.
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் எல்லையாக இருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்கிழமை (29.09.2023) மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஆன்மீக பாதயாத்திரை ஆரம்பமானது.
இந்நிலையில் இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையானது வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை நேற்று(05.09.2023) வந்தடைந்துள்ளது.
பாதயாத்திரை
அதேவேளை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் ஆரம்பமாகிய ஆன்மீக பாதயாத்திரையானது எட்டு நாட்களைக் கொண்டதாக அமைந்திருந்தது.
குறித்த யாத்திரையில் நந்திக்கொடி ஏந்தியவாறு அரோகரா கோசத்துடன் நான்காயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஆலயத்தினை வந்தடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் வருடா வருடம் ஆன்மீக பாதயாத்திரை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
