மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம்
கிழக்கிலங்கையின் மிக பழமையான பிரசித்தி பெற்றதுமான மட்டக்களப்பு கல்லடி அருள்மிகு ஸ்ரீ வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச குண்ட மகா கும்பாபிசேகம் இன்று (06.05.2026) வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிசேகத்தினை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்தன.
இந்நிலையில் நேற்று, (05.04.2026) காலை 06 மணி தொடக்கம் மாலை 5.00மணி வரையில் பெருமளவான அடியார்கள் மூலமூர்த்தி மற்றும் பரிபாலன ஆலயங்களுக்கு எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம் பெற்றது.
திங்கட்கிழமை காலை விநாயகர் வழிபாடுகளுடன் புண்ணியாவாசனம் கிரியைகள் வேத உபசாரங்கள் ஆரம்பமாக பிரதான கும்ப பூஜை, விசேட யாக பூஜைகள் மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் புடைசூழ கும்பங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆலய பரிபாலன மற்றும் மூலஸ்தான மூர்த்திகளுக்கு பக்தி பூர்வமாக வானத்தில் கருடன் வட்டமிட கும்பாபிசேகம் இடம்பெற்றது.
அதனை தொடர்ந்து பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூலமூர்த்தி மற்றும் பரிபாலன மூர்த்திகள் கும்பாபிசேகம் செய்யப்பட்டது. இதன்போது ஆலயத்தில் தசமங்கல தரிசனம் இடம்பெற்று கும்பாபிசேக சிவாச்சாரியர்களினால் ஆசியும் வழங்கப்பட்டன.