மட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட இரு கைகுண்டுகள் (photos)
மட்டு. ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து இரண்டு கை குண்டுகளை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப்படையினரால் இரண்டு கை குண்டுகளும் இன்று மீட்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள 5 ம் பிரிவு தொம்புதர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் வெளிநாட்டில் குடும்பமாக வாழ்ந்தநிலையில் குறித்த வீட்டை கடந்த 2006ம் ஆண்டு ஆயுதகுழு ஒன்று கைப்பற்றி அதில் முகாமிட்டிருந்துள்ளனர்.
இந்த நிலையில் வீட்டு உரிமையாளர் 2007 ம் ஆண்டு வந்தபோது வீட்டில் ஆயுதகுழு முகாம் அமைத்துள்ளதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
பொலிஸாரின் நடவடிக்கையின் அடுத்து வீட்டில் இருந்து ஆயுதகுழு வெளியேற்றப்பட்டது.
வீட்டின் கூரை மேல் இரு கைக்குண்டுகள்
இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் வீட்டில் குடிகொண்டு வாழ்ந்துவரும் நிலையில் சம்பவதினமான நேற்று குறித்த வீட்டை புனர் நிர்மானம் செய்துவரும் போது கூரையின் ஓடுகளை மாற்ற முற்பட்ட போது அண்டசீற்றில் இரு கைக்குண்டுகள் இருப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து தாண்டியடி விசேட அதிரடிப்படைமுகாம் குண்டு செயலிழக்கும் பிரிவு நீதிமன்ற உத்தரவை பெற்று குறித்த இரண்டு குண்டுகளையும் இன்று மீட்டு செங்கலடி கறுத்தப்பாலம் அருகில் கொண்டு சென்று செயலிழக்கச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு! பார்வையிட படையெடுக்கும் மக்கள் |

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
