மட்டக்களப்பில் மட்/மட்/சிங்கள மஹா வித்தியாலயம் மீள் ஆரம்பம்
கடந்த யுத்த காலத்தில் மூடப்பட்டிருந்த மட்/மட்/சிங்கள மஹா வித்தியாலயத்தின் கற்பித்தக் செயற்பாடுகள் 2023ஆம் ஆண்டு முதலாம் தவணையுடன் ஆரம்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டப்லியூ.ஜீ. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடக குறிப்பொன்றில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது செயற்பாட்டில் உள்ள இந்த பாடசாலையின் புதுப்பித்தல் செயற்பாடுகளை விரைவாக முடிவுறுத்தி பாடசாலையின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது எமது அபிப்பிராயமாகும்.
இந்நிலையில் பாடசாலையின் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கற்பித்தல் செயற்பாடுகள் செயற்படும் பாடசாலையாக நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளின் அனுமதிகள்
மட்டக்களப்பு நகரில் உள்ள முதலாவது சிங்கள மொழி மூல அரசாங்க பாடசாலைக்காக அமையும். இதேவேளை மூன்று மொழிகளிலும் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட விரும்பும் பிள்ளைகளுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும்.
ஆரம்பத்தில் தரம் 01 முதல் 05 வரை வகுப்புக்கள் ஆரம்பிக்க முன்மொழியப்பட்டுள்ள பாடசாலைக்கு தங்களது பிள்ளையை அனுமதிக்க எதிர்ப்பார்ப்பதாக இருப்பின் தங்களால் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் ஓன்றை 2023.01.31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தங்களது பிள்ளையின் கல்வியின் புதிய வழிவகுக்கும் சிறந்த வாய்ப்பிலிருந்து நலன் பெறுமாறு நாங்கள் அன்புடன் அழைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
