தொல்பொருள் திணைக்களத்தினால் பெயர் பலகை நடுவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சி முறியடிப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள 35ஆம் கிராமம் கண்ணபுரத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் பெயர் பலகை நடுவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொல்லியல் பகுதியென அடையாளப்படுத்தப்பட்டு பெயர் பலகை நடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
பெயர்ப்பலகை
இந்த நிலையில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கண்ணபுரம்,வேற்றுச்சேனை உட்பட சில பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தினால் பெயர்ப்பலகை நடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது அங்குவந்த பொதுமக்களும் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர்,பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் தொல்லியல் பெயர்ப்பலகை இடுவதற்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர்.
எதிர்ப்பினையும் மீறி பெயர்ப்பலகை நடமுயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது போரதீவுப்பற்று பிரதேசசபையினர் உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்த நிலையில் இரு பகுதியினருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இடும் பணிகள்
பொதுமக்களினதும் பிரதேசசபை உறுப்பினர்களினதும் கடுமையான எதிர்ப்பு காரணமாக பெயர்ப்பலகை இடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டதுடன் நடப்பட்ட பெயர்ப்பலகைளும் பிடுங்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேசசெயலகம் சென்ற தவிசாளர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் சென்று உதவிப் பிரதேசசெயலாளருடன் இது தொடர்பில் கலந்துரையாடி இவ்வாறான செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு கோரியினை முன்வைத்துள்ளனர்.