மனித பாவனைக்கு உதவாத உணவு வழங்கிய நிர்வாகி! தற்காலிகமாக மூடப்பட்ட உணவகம்
மட்டக்களப்பு நகரில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகளை தயாரித்து விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த உணவகம், நீதிமன்ற உத்தரவின் பேரில் 14 நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
நகரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றிற்கு அருகில் செயல்பட்டு வந்த இந்த உணவகத்திற்கு எதிராக, கடந்த 22ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
சிறையில் இருக்கும் ஆபத்தான நபரிடம் இருந்து முஜிபுர் எம்.பிக்கு வந்த அழைப்புகள்! வெளிக்கிழம்பும் புதிய சர்ச்சை
பொருத்தமற்ற உணவுகள் தயாரிப்பு
இதையடுத்து, உணவக நிர்வாகி நேற்று (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, உணவகத்தில் மனித நுகர்வுக்கு தகுதியற்ற உணவுப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை, உரிய அனுமதியின்றி உணவு தயாரித்தமை, சுகாதாரமற்ற சூழலில் உணவகம் நடத்தப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை பொது சுகாதார பரிசோதகர்கள் நீதிமன்றில் முன்வைத்தனர்.

மேலும், கழிவு நீர் முறையாக அகற்றப்படாதமை, உணவு தயாரிப்பு பகுதியில் பூனை காணப்பட்டமை மற்றும் மூடி இல்லாத கழிவு தொட்டிகள் இருந்தமை போன்ற சுகாதார குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டன.
இதனையடுத்து, குறைபாடுகள் சரிசெய்யப்படும் வரை 14 நாட்களுக்கு உணவகத்தை தற்காலிகமாக மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உணவக நிர்வாகி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பொது சுகாதார பரிசோதகர்கள் உடனடியாக உணவகத்தை மூடி சீல் வைத்தனர்.