விவசாய உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் நான்காவது இடத்தில்! - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்
மட்டக்களப்பு மாவட்டம் விவசாய உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (S.Viyalendiran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் கடுக்காமுனை பிரதேசத்தில் பண்டையவெளி மற்றும் படையாண்டவெளி, படையாண்ட குளம் ஆகிய பிரதேசங்களில் இடை போக அறுவடை விழா இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
எம்மிடம் இருக்கின்ற நீர்வளம், நில வளங்களை சரியாகப் பயன்படுத்தினால், நிச்சயமாக மாவட்டம் பூராகவும் 3 போகமும் வேளான்மை செய்கை செய்ய முடியும். அது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
205,000 ஏக்கர் பெரும்போகம் செய்கை செய்ய வேண்டிய இடத்தில் சுமார் 25,000 இற்கு மேற்பட்ட ஏக்கர்களில் விவசாயம் செய்யாமல் விடப்படுகின்றன.
சிறுபோகத்தில் சுமார் 80,000 ஏக்கர் நிலப்பரப்பில்தான் செய்கை செய்யப்படுகின்றது. ஆனால் சுமார் 100,000 ஏக்கர்களில் சிறுபோகம் செய்கை செய்யாமல் விடப்படுகின்றன.
இடைப்போகம் செய்வதே இல்லை. ஆனால் படுவாங்கரையில் நீர் வளமும், நிலவளமும் இருக்கின்றன.
மாவட்டத்தில் 410 குளங்கள் இருக்கின்றன. அதிலே அரைவாசிக்கு மேற்பட்ட குளங்கள் எதுவித புணரமைப்புமின்றிக் காணப்படுவது தான் விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக இருக்கின்றன.
சரியான நீர்ப்பாசன முறைமை இல்லை. நீர்ப்பாசன முறைமையில் இன்னும் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
மாறாக நீர்பாசன பொறியியலாளர்கள், அதனோடிணைந்த அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகள் வரைக்கும், இரவு பகலாக கடமை செய்கின்றார்கள்.
ஆனால் நாங்கள் பிரச்சினையை வைத்து அரசியல் செய்யவில்லை. அந்தப் பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் வேலை செய்கின்றோம்.
அததைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் ஜனாதிபதியின் வாரி சௌபாக்கியா வேலைத்திட்டம் ஊடாக எதிர்வரும் ஆண்டில் சுமார் 150 குளங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டளவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 410 குளங்கள் முழுமையாக புனரமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த அறுவடை விழாவில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் மேலதிக மாவட்ட செயலாளர், மண்முனை மேற்கு பிரதேச, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர், அப்பகுதி விவசாயிகள் உள்ளிட்ட பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.




கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri