தமிழர்கள் மீது காலால் எட்டி உதைத்து பொலிஸார் அராஜகம்! சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு (Video)

Batticaloa Shanakiyan Rasamanickam SL Protest Ampitiye Sumanarathana Thero
By Benat Oct 08, 2023 11:10 AM GMT
Report

தமிழர்கள் வீதிக்கு இறங்கி போராட்டம் செய்தால் அவர்களை அடக்குவதற்கு ஆயிரக்கணக்கில் திரண்டிருக்கும் பொலிஸார் அம்பிட்டிய தேரர் நேற்று அராஜகம் செய்த போது ஏன் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்தனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.

மட்டக்களப்பில் தற்சமயம் இடம்பெற்று வரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களுக்கு நீதிகோரிய போராட்டத்தின் போதே சாணக்கியன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை தொடக்கூடாத இடத்தை தொட்டும், காலால் எட்டி உதைத்தும், இந்த பொலிஸார் அராஜகம் செய்கின்றனர் என்றும் சாணக்கியன் கூறினார்.  


இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை போராட்டம் இன்று 24ஆவது நாட்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் 24 நாட்கள் போராட்டம் பூர்த்தியாகும் நிலையில் இன்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்றார்.

தமிழர்கள் மீது காலால் எட்டி உதைத்து பொலிஸார் அராஜகம்! சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு (Video) | Batticaloa Protest Today Sanakkiyan

அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டோம்...

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களது பிரச்சினை நியாயமானது. இதற்கொரு தீர்வு வேண்டும்.

இதன் காரணமாகத்தான் நாங்கள் நாங்கள் பண்ணையாளர்களுடன் இணைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்கள், ஏனைய அரசியல் கட்சிக்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து இந்த போராட்டத்தினை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருந்தோம்.

தமிழர்கள் மீது காலால் எட்டி உதைத்து பொலிஸார் அராஜகம்! சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு (Video) | Batticaloa Protest Today Sanakkiyan

ஆனால், இன்று காலையில் செங்கலடி பாடசாலையில் இருக்கும் மாணவர்களது கௌரவத்தை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்தோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பு செங்கலடி பாடசாலைக்கு ஒரு நிகழ்விற்காகவே விஜயம் செய்துள்ளார் . அந்த நிகழ்வினை குழப்புவது எங்களது நோக்கம் அல்ல.

தமிழர்கள் மீது காலால் எட்டி உதைத்து பொலிஸார் அராஜகம்! சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு (Video) | Batticaloa Protest Today Sanakkiyan

ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்விற்கு எந்தவொரு இடையூறும் ஏற்படுத்தாமல் வீதியோரத்தில் நாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம்.

ஆனால் பொலிஸார் அவர்களுடைய படையை களமிறக்கி, கண்ணீர்ப்புகை வாகனம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகிக்கும் வாகனம் என்பவற்றை கொணர்ந்து நீதிமன்றத்தின் தடை உத்தரவின்படி உங்களை இந்த இடத்தில் இருக்க விட மாட்டோம் என்று கூறினர்.

தமிழர்கள் மீது காலால் எட்டி உதைத்து பொலிஸார் அராஜகம்! சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு (Video) | Batticaloa Protest Today Sanakkiyan

இதன் காரணமாகத்தான், எங்களுடைய மக்கள், நேற்றையதினம் அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் நிற்கலாம் என்றால் ஏன் நாங்கள் நிற்க முடியாது என தெரிவித்து எதிர்ப்பு வெளியிட்டனர்.

சர்வதேச நாடுகளுக்கு, இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு ஒரு நீதி தமிழர்களுக்கு ஒரு நீதி என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் நாங்கள் இன்று வீதிக்கு குறுக்கே வந்து நின்று எதிர்ப்பை வெளியிட்டு வருவதற்கு நாங்கள் தீர்மானித்தோம். உண்மையில் எங்களுடைய நோக்கம் ஜனாதிபதியின் நிகழ்வை குழப்புவது அல்ல. ஆனால் நாங்கள் நினைத்திருந்தால் ஒரு ஐந்து பத்து நிமிடங்களுக்குள் அதனை செய்திருக்க முடியும்.

நாங்கள் கூட இந்த அழுத்தத்தை வெளியிடுவதற்கு காரணம், பொலிஸாரை மீறி நாங்கள் செல்ல முற்பட்டால், அவர்கள் எங்களை அடிக்கினாற்கள், தொடக் கூடாத இடங்களை தொடுகின்றார்கள்., கொலை முயற்சி செய்கின்றார்கள், காலால் எட்டி உதைக்கின்றார்கள்.

தமிழர்கள் மீது காலால் எட்டி உதைத்து பொலிஸார் அராஜகம்! சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு (Video) | Batticaloa Protest Today Sanakkiyan

ஆனால் பிக்கு வந்தால் இவை அனைத்தும் வேறு மாதிரி நடக்கின்றது. பிக்கு விழுந்து விட்டார் தண்ணீர் கொடுங்கள் என்று கூறுகின்றார்கள். இதுதான் இலங்கை பொலிஸாரின் நிலைமை.

அந்த பிக்கு ஒரு பெண் ஊடகவியலாளரைக் கூட அச்சுறுத்தும் நிலையில் அதனையும் வேடிக்கைப் பார்த்த பொலிஸார், இன்று எங்களது மக்களின் நியாயமான போராட்டத்தை நசுக்குவதற்கு ஆயிரக்கணக்கானோர் வந்திருக்கின்றார்கள்.

தமிழர்கள் மீது காலால் எட்டி உதைத்து பொலிஸார் அராஜகம்! சாணக்கியன் பகிரங்க குற்றச்சாட்டு (Video) | Batticaloa Protest Today Sanakkiyan  

இந்தநிலையில், எங்களது மயிலத்தமடு மாதவனை மேய்ச்சற் தரை விவகாரத்தில் பண்ணையாளர்களுக்கு, மாவட்ட அரசாங்க அதிபராலோ, அல்லது மாவட்டத்தின் இராஜாங்க அமைச்சராலோ தீர்வினை வழங்க முடியாது. ஏனென்றால் இராஜாங்க அமைச்சருக்கு அவர் சிறைக்குச் செல்லாமல் தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருப்பதுதான் வேலை.

எனவேதான் நாங்கள் எமக்கு நீதி கிடைக்கு வரைஇந்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை, தொடர்ந்து முன்னெடுப்போம் என்பதை கூறிக்கொள்கின்றேன்  என குறிப்பிட்டார். 

வீடியோ  - சசிகரன் 

மேலதிக தகவல்கள் - குமார், சசிகரன்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US