போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பிணையில்
மட்டக்களப்பில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களை சரீரப் பிணையில் எடுப்பதற்கு ஆட்கள் இல்லாத காரணத்தினால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவர்கள் அறுவரும் நேற்றையதினம் மாலை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.
இந்த நிலையில் குறித்த மாணவர்களை மேலதிக நீதவான் அன்வர் சதாத் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில்விடுவிக்க உத்தரவிட்டார்.
ஆவணங்கள் ஒப்படைப்பதில் தாமதம்
எனினும், குறித்த நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வதிவிடத்தைக் கொண்ட ஆள் சரீரப்பிணையில் அவர்களை எடுப்பதற்கு தேசிய அடையாள அட்டையை கிராமசேவகர் உறுதிப்படுத்திய ஆவணங்களை நீதிமன்றில் நேற்றைய தினம் ஒப்படைக்க தாமதமான நிலையில் அவர்களை சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் கையளித்ததையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குறித்த மாணவர்கள் மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களை ஆள்பிணையில் எடுப்பவர்கள் ஆவணங்களுடன் சிறைச்சாலைக்கு சென்று வழங்கியதன் பின்னர் இன்று விடுவிக்கப்படவுள்ளனர்.
மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர்களின் 52ஆவது நாள் போராட்டத்திற்கு குறித்த மாணவர்கள் நேற்றையதினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததுடன், அங்கு போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தனர் என தெரிவித்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்களை கைகளிவில் விலங்கிட்டு நீதிமன்றுக்கு கொண்டுசென்ற சமயம் சந்திவெளி பொலிஸார் அராஜகம் செய்கின்றனர். அவர்கள் நாசமாக போவார் என திட்டி பொலிஸாருக்கு கடுமையாக பேசியதுடன் பெண்கள் அழுது புலம்பியதையும் போராட்டத்தில் காண முடிந்தது.
நேற்று மாலை சந்திவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் நீதிவான் நீதிமன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டபோதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
தங்களுக்கு நீதி வழங்கமுடியாதவர்கள் தமக்கு ஆதரவாக வந்த மாணவர்களை கைதுசெய்து
கேவலமான செயற்பாட்டை பொலிஸார் செய்துள்ளதாக இதன்போது பொலிஸ் நிலையத்திற்கு
முன்பாக நின்ற பெண்கள் கூக்குரலிட்டனர்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 14 மணி நேரம் முன்

இரண்டு நாட்களில் விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அங்கீகாரம்: பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் இன்று முக்கிய அறிவிப்பு News Lankasri
