கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேரடி கள விஜயம் மேற்கொண்ட ஸ்ரீநேசன் எம்.பி
மட்டக்களப்பில் ஏறாவூர்ப்பற்று பிரதேசத்திலுள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு கித்துள் பிரதேசத்தில் அமைந்துள்ள மேசல்தரைப் பகுதிக்கு நேற்று (01.11.2025) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் சென்றிருந்தார்.
அப்பகுதியிpருந்த சுமார் 50 கல்நடை வளர்ப்பாளர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரிடம் நேரடியாக எடுத்துரைத்திருந்தார்கள்.
அப்பகுதியில் மேய்ச்சல் தரைப் பகுதியில் அத்துமீறி காடுகளை அழித்தல், பயிர்ச்செய்கை மேற்கொள்ளுதல், போன்றவற்றால் கால் நடைகளுக்கு மேய்ச்சல் தரைப் பகுதி குறைந்து கொண்டு செல்கின்றன.
தமது மேய்ச்சல்தரை நிலம் பாதுகாக்கப்படா விட்டால் தமது கால்நடைகளைப் பராமரிக்க முடியாமல் போய்விடும் எனவே சட்ட விரோதமாக காடுகளை அழிப்பதை தடுக்க வேண்டும் என அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இது தொடர்பாக அரசாங்க அதிபர், அப்பகுதி பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், வனவளத் திணைக்கள பிராந்திய அதிகாரி மற்றும் கிராம சேவகர் ஆகியோருக்கு அவ்விடத்திலிருந்தவாறே தொலைபேசி மூலம் பாராளுமன்ற உறுப்பினர் எடுத்துக் கூறினார்.







பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 22 மணி நேரம் முன்
மகளிர் உலகக்கோப்பை - இந்தியா வெற்றிபெற்றால் மாபெரும் பரிசுதொகையை அறிவிக்க உள்ள பிசிசிஐ News Lankasri
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan