ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறப் போகின்றது: இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்
ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறப்போகின்றது. இந்நிலையில் எந்தக்கட்சியும் யாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவுள்ளோம் என்பதை இதுவரையில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (Sathasivam Viyalendiran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு(Batticaloa), மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட எருவில் கிராமத்தில் புனரமைக்கப்பட்ட 347 ரூபா மில்லியன் செலவில் 8.4 கிலோமீற்றர் உள்ளக வீதிகள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் இன்று (19.04.2024) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.அவரது வாக்கு பலம்தான் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் இலங்கையிலிருக்கின்ற சிறுபான்மை மக்களுக்குள்ளேயே ஒருவரை பொது வேட்பாளராக தீர்மானிக்க வேண்டும்.
ஆனால் தற்போது இருக்கின்ற கட்சிகளுக்குள்ளேயே யாருடைய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவது என்பது தொடர்பில் போட்டித்தன்மை காணப்படுகின்றது” என தெரிவித்துள்ளார்.
இதன்போது வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்விற்கு விசேட அதிதிகளாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதம நிறைவேற்று பொறியியலாளர் வரதன், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் வை.சந்திரமோகன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம நிறைவேற்று பொறியியலாளர் லிங்கேஸ்வரன் உள்ளிட்ட கிராமிய பொதுஅமைப்புக்களின் தலைவர்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும், தமது கிராமத்தில் நீண்ட காலமாக பாரிய பிரச்சினையாக இருந்து வந்த வீதிகளை செப்பனிட்டு கொடுத்தமைக்காக அப்பகுதி மக்கள் இராஜாங்க அமைச்சருக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
