மட்டக்களப்பு பெயர்ப்பலகை விவகாரம்.. ஒருவர் கைது!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப்பலகை தப்பிச் சென்ற சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களால் கொண்டு செல்லப்பட்ட பெயர்ப்பலகையை வாழைச்சேனை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்துடன், சம்பவத்தில் தொடர்புடைய வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்புப் பலகை
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் இடங்களில் வழிகாட்டுதல் பலகைகள் மற்றும் அறிவிப்புப் பலகைகளை நிறுவும் பணியை தொல்பொருள் திணைக்களம் கடந்த நவம்பர் 3ஆம் தேதி ஆரம்பித்திருந்தது.

இதனையடுத்து, கடந்த 22ஆம் திகதி இந்த அறிவிப்புப் பலகைகள் வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் உள்ளிட்ட குழுவினரால் அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |