மட்டக்களப்பு - மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி
கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் திறமையான விளையாட்டு வீரர்களை தேசிய ரீதியில் கொண்டு செல்வதற்கு அரசுகள் முன்வராத நிலையில் அந்த செயற்பாடுகளை இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 211ஆவது ஆண்டு நிறைவு பூர்த்தியடைந்துள்ள நிலையில் அதனை சிறப்பிக்கும் வகையில் மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த சுற்றுப்போட்டி ஆரம்பமாகியுள்ளது.
மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க தலைவர் வை.கோபிநாத் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக பாடசாலை அதிபர் கே.பாஸ்கர் மற்றும் முன்னாள் பழைய மாணவர் சங்க தலைவர்கள்,பாடசாலை அபிவிருத்திக்குழுவின் தலைவர் உட்பட பழைய மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது ஆரம்ப நிகழ்வினை தொடர்ந்து அதிதிகளினால் வீரர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டு சுற்றுப்போட்டி ஆரம்பித்துவைக்கப்பட்டது.











