மயிலத்தைமடு மேய்ச்சல் தரை விவகாரம்: தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கருத்து
மட்டக்களப்பு - மயிலத்தைமடு மேச்சல் தரை என்பதை தாண்டி எமது மண்ணுக்கான போராட்டம் அது. இந்த மேச்சல் தரை விடையத்தில் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர் என எனத் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.
செங்கலடியிலுள்ள தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் காரியாலயத்தில் நேற்றைய தினம் (11.03.2023) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு - மயிலத்தைமடு மேய்ச்சல் தரை விவகாரம் பார்ப்பதற்கு எமது மாவட்ட அமைச்சர்களுக்கு நேரமில்லை. ஏனென்றால் கைக்கட்டி வாங்கி கொண்ட அமைச்சுப் பதவிகளைத் தக்கவைக்க வேண்டுமாக இருந்தால் மேய்ச்சல் தரையை விட்டுக் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்பது அவர்களது நிலைப்பாடாக இருக்கின்றது.
ஆட்சேபனையும் இல்லை
எனவே, மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக சில அரசியல் வாதிகள் தங்கள் கூறுகின்ற விடையம் ஊடகத்துக்கு வரவேண்டும் எனச் செயற்படுகின்றனரே தவிர, முடிவு இல்லை அந்த விடையத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.
உதாரணமாக பயங்கரவாத தனிச்சட்டத்திற்கு எதிராக வாங்கிய கையெழுத்து இன்னும் கொடுக்கப்படவில்லை. இது போன்ற செயற்பாடுகள் நடக்கின்றதே தவிர இந்த பிரச்சினைக்கு முடிவு இல்லை. இதை முடிக்கவேண்டும் என்று அரசியல்வாதிகளும் கவனம் எடுக்கவில்லை என்பதுடன், எமது மாவட்டத்தில் அமைச்சுப் பதவிகளை கைக்கட்டி வாங்கிக் கொண்டவர்கள் தமது அமைச்சுப் பதவிகளை தக்கவைக்க வேண்டுமாக இருந்தால், மேச்சல் தரையை விட்டுக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். இதுவே அவர்களது நிலைப்பாடாக உள்ளது. எனவே, மக்கள் போராட்டம், மனித உரிமைகள் செயற்பாட்டின் முயற்சி என்பன காலப் போக்கில் நிச்சயமாக வெற்றியளிக்கும்.
அதேவேளை, உள்ளூராட்சி தேர்தல் சட்டப்படி நடத்தப்பட வேண்டும். இந்த தேர்தல் சில அரசியல் கட்சிகளுக்குத்தான் தேவையாக இருக்கின்றதே தவிர மக்களுக்குத் தேவை இல்லை.
நாட்டின் இறுக்கமான பொருளாதார நிலையிலே சமுர்த்தி வழங்குவதில், சம்பளம் வழங்குவதில் பிரச்சினை இருக்கின்றதுடன், மருந்து தட்டுப்பாடு இருக்கின்ற நிலையை அறிந்தும் கூட அரசியல்வாதிகள் தேர்தலை நாடி நிற்பது மக்களைப்பற்றி கவலை கொள்ளாமல், யார் தலை உருண்டாலும் பரவாயில்லை நாங்கள் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கின்ற அதிகார வெறியின் வெளிப்பாடுதான் இது.
காணி விடையத்தில் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். முடிந்தவரைத் தமிழர்கள் இருக்கின்ற காணிகளைக் கையகப்படுத்துங்கள் அது யாராக இருந்தாலும் தமிழர்கள் கையகப்படுத்துவதில் எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை. அதேவேளை, இருக்கின்றவர்கள் இல்லாதவர்களுக்கும் இடம் கொடுங்கள் அதாவது நிலம் குத்தகையாக இருக்கட்டும் பொமிற்றாக இருக்கட்டும்.
வீதி வேலைத்திட்டம்
5 வருடங்களின் பின்னர் தமிழர்களின் நிலை எப்படி இருக்கப் போகின்றது எனத் தெரியாது. எனவே, நிலத்தைத் தக்கவைப்பதிலே எல்லோரும் முயற்சியாக இருங்கள் பிள்ளையான் குத்தகைக்கு எடுத்தார் அவர் எடுத்தார் எனத் தெரிவிக்கலாம். குத்தகைக்கு யார் வேண்டுமானாலும் எடுக்கலாம், முடிந்தவர்கள் அரசாங்க நிலமாக இருந்தாலும் நீங்கள் தொழில் செய்வதற்குக் குத்தகைக்கு வாங்குங்கள் இருப்பதற்கு இடமில்லாதவர்கள் அரச காணியாக இருந்தாலும் கையகப்படுத்துங்கள்.
அண்மைக் காலமாக நசீர் அகமட் அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்பு கிழக்கு மாகாணத்தில் மண் அகழ்வு வழங்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன், அதில் இன ரீதியான பாகுபாடு நடப்பதாக இது சார்ந்தவர்கள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார் எனவே இதில் பாதிக்கப்பட்டவர்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம்.
அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டக்களப்பிற்கு வெள்ளிக்கிழமை (10) தனிப்பட்ட விஜயம் மேற்கொண்ட போது, விமான நிலையத்தில் என்னை சந்தித்தவேளை கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கனகசிங்கம் பதிவாளர் பகிரதன் ஆகியோரை அவருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டபோது கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஆரம்பிப்பதற்கும் இந்திய அரசின் உதவியுடனான கேட்போர் கூடம் அமைப்பதற்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அறுவடைக்காலத்தையும் விதைப்புக் காலத்தையும் கருத்தில்
கொண்டு உரமானியம், நெல்விலை நிர்ணயம் மற்றும் நெல் கொள்வனவு தொடர்பாகவும்
தேவையான நேரத்தில் உரங்கள் வழங்கப்படுவதில்லை போன்ற விவசாயிகளின் பிரச்சினைகள்
மற்றும் இடை நடுவிலே நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஒரு இலட்சம் வீதி
வேலைத்திட்டத்தில் இருக்கின்ற பொருளாதாரம் முக்கியத்துவம் வாய்ந்த வீதிகள்
புனரமைக்க வேண்டும் எனவும் நகர மயமாக்கல் திட்டத்தில் செங்கலடி உள்வாங்க
வேண்டும் எனக் கவனத்திற்குக் கொண்டுவந்தபோது அவைகளைச் செய்துதருவதாக ஜனாதிபதி
உறுதியளித்தார் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam

ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா Cineulagam

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri
