மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியரொருவர் போதை மாத்திரையுடன் கைது
மட்டக்களப்பு - கல்குடாவில் இருந்து கல்முனைக்கு 3 ஆயிரம் போதை மாத்திரைகளை மோட்டார் சைக்கிளில் மறைத்து எடுத்துச் சென்ற பிரதான போதை மாத்திரை வியாபாரியான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஊழியராகக் கடமையாற்றிவரும் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரை கல்முனை பகுதியில் நேற்று விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகலையடுத்து கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் சம்பவதினமான நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது மட்டக்களப்பு,கல்குடாவில் இருந்து கல்முனைக்கு டியோ ரக மோட்டார் சைக்கிள் ஒன்றில் போதை மாத்திரைகளைப் பொதி செய்து மோட்டார் சைக்கிள் இருக்கைக்குக்கீழ் மறைத்து எடுத்து வந்த நிலையில், விசேட அதிரடிப்படையினர் கல்முனை பகுதியில் வைத்து நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது 3 ஆயிரம் போதை மாத்திரைகளை மீட்டுள்ளதுடன், குறித்த நபரைக் கைது செய்துள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வருவதாகவும், 32 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் இவர் கொழும்பிலுள்ள முகவரோடு நேரடியாகப் போதை மாத்திரைகளை இறக்குமதி செய்து மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் போதை மாத்திரை ஏக விநியோகத்தராக கடந்த 6 வருடங்களாகச் செயற்பட்டு வருவதாக அதிரடிப்படையினரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டவர் மற்றும் மீட்கப்பட்ட போதை மாத்திரை மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையின் ஒப்படைத்ததையடுத்து இவரை நீதிமன்றில் ஆயர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
