மட்டக்களப்பில் இரத்தத்திற்குத் தட்டுப்பாடு! இரத்ததானம் வழங்க முன்வருமாறு கோரிக்கை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் கந்தசாமி கிருஷானந் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே இரத்தத்தை தானமாக வழங்க பொது மக்கள் முன்வருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தனின் பிறந்த தினமான இன்று அதனை முன்னிட்டு இரத்த தானம் வழங்கும் நிகழ்வு கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரே ஒரு போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகும். இங்கு பொலன்னறுவை தொடக்கம் அம்பாறை பொத்துவில் வரையிலான அதிகளவான நோயாளர்கள் இரத்த சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்த நிலையில் நாள் ஒன்றுக்கு 30 தொடக்கம் 35 பைன் இரத்தம் தேவைப்படுகின்றது. அதேவேளை எமது பிரிவின் கீழ் உள்ள களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைகளுக்கு எமது பிரிவின் ஊடாக இரத்தம் வழங்கப்படுகின்றது.
அதேவேளை சிறுவர்களுக்கு ஏற்படும் களிசினியா நோய் நோயாளர்கள் அதிகளவானோர் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த நோயாளர்களுக்கு ஒரு மாதத்திற்கோ அல்லது இரு வாரங்களுக்கு ஒருமுறை இரத்தம் ஏற்றவேண்டி உள்ளதுடன், விபத்தில் ஏற்படும் இரத்த இழப்பு மற்றும் சத்திரசிகிச்சை ஏற்படும்போது போன்ற பல்வேறு நோய்களுக்கு இரத்தம் தேவைப்படுகின்றது.
இருந்தபோதும் தற்போது கோவிட் காரணமாக இரத்தம் பெறுவது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது.
எனவே 18 வயதுக்கும் 58 வயதுக்கும் இடையிலுள்ள சுகதேகியான பொதுமக்கள் இரத்தத்தை நன்கொடை வழங்குபவர்கள் வைத்தியசாலைக்கு நேரடியாக வந்து இரத்தத்தை வழங்குங்கள் அல்லது இரத்தத்தை வழங்கக் கூடிய முகாம்களை ஒழுங்கு செய்து தருமாறு அழைப்பு விடுக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam
