போதைப் பொருட்களுடன் இருவர் கைது
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவரையும் மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவரையும் நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய ஓட்டமாவடி பிரதேசத்தில் உள்ள குறித்த வீட்டை வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்ட போது, அங்கிருந்து 160 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேவேளை வாழைச்சேனை 18ம் கட்டை பிரதேசத்தில் உள்ள மற்றொரு வீட்டை முற்றுகையிட்ட போது அங்கிருந்து 150 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.