மட்டக்களப்பில் விபரீத முடிவெடுத்த தந்தை
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவு உட்பட்ட மாஞ்சோலை கிராமத்தில் நபரொருவர் பெட்ரோலை தன்னில் ஊற்றி எரிந்து கொண்டு தன்னுடைய மகளையும் எரிப்பதற்கு முயற்சி செய்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (15.10.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை கிராமத்தில் வசித்து வந்த சலீம் என்பவர் தன்னுடைய மகளை துன்புறுத்தல் செய்து வருவதாக அப்பிள்ளையின் தாயின் சகோதரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மகளையும் எரிக்க முயற்சி
அந்த முறைப்பாட்டுக்கமையே விசாரணையயை மேற்கொள்ள சலீமின் வீட்டுக்கு பொலிஸார் சென்ற பொழுது அவர் பெட்ரோலை தன்னில் ஊற்றி எரிந்து கொண்டு தன்னுடைய மகளையும் எரிப்பதற்கு முயற்சி செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து சலீமின் மகளை காப்பாற்றியுள்ளதுடன், காப்பாற்ற முற்பட்ட பொலிஸார் தீக்காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சலீமின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவரது மகள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan