வியாழேந்திரனின் வீட்டிற்கு முன் வைத்து தலையிலேயே சுட்டார்கள் - பல விடயங்களை அம்பலப்படுத்தும் சகோதரி
மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் சகோதரி ஸ்தலத்தில் நடந்த பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் நண்பரொருவர் நேரடி சாட்சியம் வழங்கியிருந்த நிலையில் உயிரிழந்தவரின் சகோதரி இவ்வாறு கண்ணீர் மல்க வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதன்படி, “ஏன் அவரை சுட வேண்டும். என்வென்றாலும் கூப்பிட்டு பேசியிருக்கலாம் தானே? அமைச்சர் இல்லாத போது பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அங்கு என்ன வேலை?
எனது சகோதரர் பயணித்தது சாதாரணமான, எல்லாருக்கும் பொதுவான ஒரு வீதி. என்ற போதும் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாக செல்லும் போது வாகனத்திலிருந்து கீழே இறங்கி தான் செல்ல வேண்டும் என அந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் கூறியுள்ளார்.
எனது சகோதரரை தலையிலேயே சுட்டுள்ளார்கள்.
எனவே இந்த உண்மைகள் எல்லாம் தெரியவர வேண்டும் எனில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தனது வீட்டின் சிசிடிவி காணொளிகளை வெளிப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 14 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan