மட்டக்களப்பில் இரு கிராம சேவகர் பிரிவுகளை விடுவிக்க பரிந்துரை
மட்டக்களப்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிரான்குளம், கிரான்குளம் மத்தி ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளை விடுவிக்க தேசிய கோவிட் தடுப்பு செயலணிக்கு இன்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
பி.சி.ஆர் பரிசோதனையில் அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கிரான்குளம், கிரான்குளம் மத்தி ஆகிய இரு கிராம சேவகர் பிரிவுகளிலும் கண்டறியப்பட்டதை அடுத்து அந்த இரு கிராம சேவகர் பிரிவுகளும் கடந்த 14 ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டன.
இந்தநிலையில் தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் தொடர்ச்சியாக ஆன்டிஜென், பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது அங்கு தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படாத நிலையில் முடக்கப்பட்ட இரு கிராம சேவகர்
பிரிவுகளையும் திறப்பதற்கு முடிவு செய்து அதற்கான பரிந்துரைகளை தேசிய கோவிட் தடுப்பு செயலணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.