ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் நடு தெருவில் நிற்கும் : சந்திரகுமார் (Photos)

Government Batticaloa People SriLankaFreedomParty
By Independent Writer Mar 13, 2022 08:26 PM GMT
Report

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போகின்றோம் என தெரிவிக்கின்றார்கள், முடியுமானால் வெளியேறிக் காட்டட்டும். போனால் நடுத்தெருவில்தான் நிற்கவேண்டும் எனவும் இந்த அரசாங்கத்தில் இணைந்திருக்கும்போது தான் அவர்களுக்கு வாழ்க்கை என பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதிக்கான இளைஞர் மாநாடு பெரியபோரதீவிலுள்ள தனியார் மண்டபத்தில் இன்று (13) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது கலந்து கொண்டு தலைமையுரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை மக்கள் எதுவித வேறுபாடுகளுமின்றி எமது அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வருகின்றது. கிழக்கு மாகாண சபையில் ஒரு தமிழரை முதலமைச்சராக்கியது மகிந்த ராஜபக்சதான். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்தவர்கள் வேறு யாருக்கோ முதலமைச்சர் பதவியைத் தூக்கிக் கொடுத்தார்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் நடு தெருவில் நிற்கும் : சந்திரகுமார் (Photos) | Batticaloa Government Sri Lankafreedomparty People

இந்தியாவின் மூலம் மாகாண சபை முறைமை குறிப்பாக தமிழர்களுக்காக உருவாக்கப்பட்டது. இந் நிலையில் கடந்த முறை தமிழரை கிழக்கில் அழவிடாமல் இருந்தார்கள். தற்போது நல்லாட்சி அரசாங்கம் இருந்திருந்தால் வெளிநாடுகளைப் போன்று கோவிட்டால் அதிகபேர் மரணித்திருப்பார்கள்.

எமது அரசாங்கம் மக்களின் உயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுகின்றது. எவர் வந்தாலும் கூச்சலிடலாமே தவிர நாட்டைக் கொண்டு நடாத்த முடியாது. நாட்டைக் கொண்டு நடாத்தக்கூடிய சக்தி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்திற்கு மாத்திரமே உள்ளது.

நாடு என்பது ஒரு குடும்பம் போன்றது தான் குடும்பத்தில கஷ்டம் வரும்போது பலவிடயங்களை மேற்கொள்வோம். அதுபோன்று தான் நாட்டையும் கொண்டு நடாத்த வேண்டியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் நடு தெருவில் நிற்கும் : சந்திரகுமார் (Photos) | Batticaloa Government Sri Lankafreedomparty People

இந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பது நமது கடமை இந்த அரசாங்கம் இன்னும் 10 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்யும். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறப் போகின்றோம் என தெரிவிக்கின்றார்கள். முடியுமானால் வெளியேறிக் காட்டட்டும். போனால் நடுத்தெருவில்தான் நிங்கவேண்டும். இந்த அரசாங்கத்தில் இணைந்திருக்கும்போது தான் அவர்களுக்கு வாழ்க்கை.

மட்டக்களப்புக்கு அதிகளவு அபிவிருத்திகள் இன்னும் வர இருக்கின்றது. பொதுஜன பெரமுன கட்சியைக் கொண்டு வந்ததன் காரணமாகத் தான் மாவட்டத்திலிருந்து ஒரு அமைச்சரை உருவாக்க முடிந்துள்ளது. அதுபோன்று அரச சார்பான நாடாளுமன்ற உறுப்பினரையும் தேர்ந்தெடுக்க முடிந்துள்ளது. எல்லா நாடுகளிலும் பிரச்சினைகள் உள்ளன. வெளிநாடுகளிலும் 4மடங்கு பொருட்களுக்கு விலைகள் அதிகரித்துள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் நடு தெருவில் நிற்கும் : சந்திரகுமார் (Photos) | Batticaloa Government Sri Lankafreedomparty People

முன்பள்ளி ஆசிரியர்களை நிச்சயமாக நிரந்தரமாகக்க வேண்டியுள்ளது. அதனை நான் முன்னின்று செய்து தருவேன். மட்டக்களப்பிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் ஊடாக இலங்கைளிலுள்ள அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என நான் நம்புகின்றேன்.

எமது அரசாங்கம் 58ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கியது. ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் கிழ் 38ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் 24 மைதானத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தை விட்டு வெளியேறினால் நடு தெருவில் நிற்கும் : சந்திரகுமார் (Photos) | Batticaloa Government Sri Lankafreedomparty People

வெளிநாடுகள் சொல்வதைத்தான் நமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்துவிட்டு வருகின்றார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஒரு மீற்றர் வீதிகூட போடவில்லை. அவர்கள் நமது மாவட்டத்தையும், புவியியல் தன்மையையும் அறிந்திராதவர்கள்.

ஜே.வி. கட்சியினால் நமக்கு ஒரு கிணறுகூடக் கட்டித்தரமுடியவில்லை, இவ்வாறானவர்கள் எமது மக்களை அவர்களுக்குச் சாதகமாக மாத்திரம் பயன்படுத்தி வருகின்றார்கள். நாங்கள் இந்த மக்களோடு ஊறிப்போனவர்கள். எனவே எமது மக்களின் பிரச்சினைகளை ஆளும் கட்சியினால் மாத்திரம்தான் எததையும் மேற்கொள்ள முடியும்.

பாதாளத்திற்குச் சென்ற நாட்டைத்தான் எமது ஜனாதிபதி பொறுப்பேற்று வழிநடாத்தி வருகின்றார். இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால்தான் நாட்டை முன்கொண்டு செல்லலாம்.அதற்காகவேண்டி இளைஞர்களை நாம் எம்முடன் கைகோர்த்து செயற்படுவதற்கு அன்புடன் அழைக்கின்றோம்.

அதற்குரிய அனைத்து வசதி வாய்ப்புக்களையும் நாம் மேற்கொண்டு தருகின்றோம். எதிர்காலத்தில் பட்டிருப்பு தொகுதியில் ஆளும் கட்சி சார்ந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்வு செய்ய வேண்டும் என  இதன்போது தெரிவித்தார்.

செய்தி : ருசாத் மற்றும் குமார்

GalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US