மட்டக்களப்பில் வெள்ளத்தில் மூழ்கிய பல இடங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் பெய்துவரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு நகரத்தில் பல இடங்களில் மரம் வீழ்ந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன் பல இடங்களில் வெள்ளத்தினால் வீதிகள் மூழ்கியுள்ளன.
இன்று (26) அதிகாலை முதல் பெய்த இடைவிடாத பலத்த காற்றுடனான மழையினால் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள பார் வீதியில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்துள்ளதனால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.
இயல்பு வாழ்க்கை
மட்டக்களப்பு மாநகர சபையினால் முறிந்து விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதுடன், மின்சார சபையினால் மின் துண்டிக்கப்பட்ட பகுதிகளின் மின் இணைப்புக்கள் சீர் செய்யப்பட்டது.

மட்டக்களப்பின் நகர்ப்பகுதியான கூழாவடி,திசவீரசிங்கம் சதுக்கம்,இருதயபுரம்,கறுவப்பங்கேணி,பூம்புகார்,புதூர்,திமிலைதீவு,சேற்றுக்குடா உட்பட பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது.
இதேபோன்று கல்லடி பகுதியிலும் மரங்கள் முறிந்ததனால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி காணப்படுவதுடன், பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதனால் மக்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை காணமுடிகின்றது.
நேற்றைய தினம்(25) மட்டக்களப்பு நகரில் 93.6மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற கால நிலை
சீரற்ற கால நிலையை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அடை மழை தொடர்ந்து பெய்து வருகின்றது.

இதனால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் 8 பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 62 குடும்பங்களைச் சேர்ந்த 210 பேர் வீட்டை வெட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளதுடன் 26 வீடுகள் பகுதியளவில் சேதமடை ந்துள்ளதாக மாவட்ட அனர்த முகாமைத்து நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த 21ம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பித்த மழை சீரற்ற கால நிலையால் தொடர்ந்து பெய்து வருகின்றது இந்த நிலையில் மாவட்டதிலுள்ள குளங்கள் நிரம்பி வருகின்றதுடன் தாழ் நிலப் பிரதேசங்கள் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன் காற்றினால் பல பிரதேசங்களில் வீதிக்கு குறக்கே மரங்கள் மறிந்து வீந்தனஇவற்றை அந்தந்த பிரதேச பிரதேச சபையினர் வெட்டி அகற்றி வருகின்றனர்.
இயல்பு வாழ்க்கை
இதேவேளை இந்த அடைமழையடுத்து கிரான் தாம்போதிக்கு மேலால் வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதால் கிரானுக்கும் புலிபாய்ந்தகல்லுக்கும் இடையே உள்ள போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மட்டக்களபு;பு வவுணதீவு வலையிறவு பாலம் மற்றும் மட்டக்களப்பு சுமைதாங்கி தாம்போதிகளின் மேலால் வெள்ள நீர் பாய்ந் தோடுவதால் மட்டக்களப்பு நகருக்கம் வவுணதீவுக்கும் இடையேயும் புதூருக்கும் மட்டக்களப்பு நகருக்கம் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே வெல்லாவெளி தாம்போதியினால் வெள்ள நீர் பாய்ந்தோடுவதால் வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பு திருப்பெரும்துறை பிரதேசம் வெள்ளத்தர் மூழ்கியுள்ளதையடுத்து அந்த பகுதிக்கான போக்கவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அடை மழையினால் கடற்றொழிலாளர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதை தவிர்த்துள்ளதுடன் வீதி போக்குவரத்துக்கள் குறைவடைந் துள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை செயலிழந்துள்ளதுடன் தொடர்ந்து காற்றுடன் அடை மழை பெய்துவருகின்றமை குறிப்பிடதக்கது
மேலதிக தகவல்-சரவணன்











கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam