மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டவர்களிடம் நட்டஈடு கோரும் விவசாயிகள்

Human Rights Commission Of Sri Lanka Batticaloa Sri Lankan Peoples
By Bavan Jan 20, 2025 04:04 PM GMT
Report

மட்டக்களப்பில் (Batticaloa) விவசாய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட திகதியில் தான் அறுவடை செய்ய வேண்டும் என, மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தமையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை வெள்ள நீரில் மூழ்கியுள்ளமைக்கு நட்ட ஈட்டை தர வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக இரு தினங்களாக பெய்துவரும் கனமழையினால் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கி வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஊடகங்களுக்கு நேற்று (19) கருத்து தெரிவிக்கையில், "2024-2025ஆம் ஆண்டு பொரும்போக வேளாண்மை செய்கை தொடர்பாக முன்னோடி கூட்டத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி நெல் அறுவடை என தீர்மானிக்கப்பட்டு முடிவு எட்டப்பட்டது. 

அரசாங்கத்தின் செயற்பாடே, தமிழ் மக்களிடம் இருந்து தமிழ்க் கட்சிகளை அந்நியப்படுத்தப்படும்..!

அரசாங்கத்தின் செயற்பாடே, தமிழ் மக்களிடம் இருந்து தமிழ்க் கட்சிகளை அந்நியப்படுத்தப்படும்..!

பூச்சி தாக்கம்

இருந்த போதும் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் அறுவடை செய்யும் நிலையில் வேளாண்மை விளைந்துள்ளதுடன் அறக்கொட்டி பூச்சி தாக்கமும் ஏற்பட்டுள்ளது.


இருந்தபோதும் அனர்த்த முகாமைத்துவத்தால் எதிர்வரும் 18ஆம் திகதியில் இருந்து கனமழை பெய்யும் விவசாயிகள் அவதானமாக செயற்படுமாறு அறிவித்தனர். 

மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டவர்களிடம் நட்டஈடு கோரும் விவசாயிகள் | Batticaloa Farmers Issue

இதனையடுத்து இரஜாங்க அதிபரை சந்தித்து கனமழைவர இருக்கின்றது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அறுவடை செய்யவேண்டிய நிலையில் பாரியளவில் விளைந்த வேளாண்மை மற்றும் அறக்கொட்டி பூச்சி தாக்கம் ஏற்பட்ட வேளாண்மை அறுவடை செய்ய வேண்டியுள்ளது. ஆகவே அறுவடையை செய்ய அந்தந்த அமைப்புக்களை தீர்மானித்து முடிவெடுக்குமாறு கேட்டுக் கொண்டோம்.

அதற்கு அரசாங்க அதிபர் வாய்மூலமாக ஒரு உத்தரவு தந்தார். அமைப்புக்கள் ஓம் என்றால் உடனடியாக அறுவடை செய்யுமாறு மழை வெள்ளத்தில் பாதிக்காது செய்யுமாறு தெரிவித்தார்.

பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

வெள்ளத்தில் மூழ்கிய வேளாண்மை.. 

அந்தவகையில் ஒரு விவசாயி அறவடை செய்ததை ஆரம்பித்ததையடுத்து அதனை சிலர், அமைப்புக்கள் என தெரிவித்துக் கொண்டு வேறு பெயர்களை சூட்டிக் கொண்டு பச்சைக்காய்களை வெட்டப் போகின்றார்கள் என பொய்பிரசாரத்தை தெரிவித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து அறுவடை செய்வதை தடுத்தனர்.

மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட்டவர்களிடம் நட்டஈடு கோரும் விவசாயிகள் | Batticaloa Farmers Issue

பெரும்போக செய்கை என்பது ஒருவருக்கு முந்தும் ஒருவருக்கு பிந்தும் இருந்தபோதும் விளைந்த வேளாண்மை நிற்காது இந்த மழைகாரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் வேளாண்மை தண்ணீரில் மிதக்கின்றது அழிவடைந்துள்ளது. 

அத்துடன் அறக்கொட்டி பூச்சி இருந்தும் விளைந்த வேளாண்மையை வெட்டிக் கொள்ள முடியாத நிலையை சிலர் உருவாக்குகின்றனர் என்றால் இவர்கள் என்ன விவசாயிகள் மூன்று அழிவு இடம்பெற்றுள்ளது. வெள்ளம், பூச்சி, நேரத்துக்கு வெட்டவில்லை இந்த காரணத்தால் இந்த அழிவு ஏற்பட்டுள்ளது.

சில வெளிநபர்கள், அமைப்பு என இருப்பவர்கள் தடைபோட்டதால் எமது வேளாண்மை நாசமாகியுள்ளது. இந்த நட்டத்தை அரசாங்கம் எப்படி தரமுடியம் மனித உரிமையில் போய் தடை போட்டவர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு என்ன பதில் சொல்லபோகின்றனர்” என கேள்வியெழுப்பியுள்ளனர். 

கம்பளை மரக்கறி தோட்டத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு

கம்பளை மரக்கறி தோட்டத்தில் ஆணொருவரின் சடலம் மீட்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US