மட்டக்களப்பில் முகத்துவாரம் அகலும் பணி ஆரம்பம்: விவசாயிகள் மகிழ்ச்சி (Video)
மட்டக்களப்பில் கமநல அமைப்புகளின் வேண்டுகோளுக்கிணங்க முகத்துவாரம் அகலும் பணி ஆரம்பமாகியுள்ளது.
இந்த அகழ்வு பணி நேற்றையதினம்(03.07.2023) இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் பணிப்புரையின்பேரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி முகத்துவாரம் அகலும் பட்சத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் பாதுகாக்கப்படுவதுடன் குறித்த முகத்துவாரத்தினூடாக இயந்திரபடகு மூலம் ஆழ்கடல் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் இலகுவாக தங்கள் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் விவசாயிகளும், அப்பகுதி கடற்றொழிலாளர்களும் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் அமையப்பெற்ற கவுடாதீவு, மகளுர், குறுமன்வெளி
போன்ற கிராமங்களிலுள்ள வயல்வெளிகளில் காட்டு வெள்ளம் உட்புகுந்ததன் காரணமாக
அறுவடைக்கு தயாரான ஆயிரக் கணக்கான வயல் நிலங்கள் அழியும் தறுவாயில்
காணப்படுகின்றது.
இந்நிலையில் அக்கிராம மக்களும், கமநல அமைப்புக்களும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சி. சந்திரகாந்தனிடம், கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
இதற்கான களவிஜயத்தினை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளருமான பூ. பிரசாந்தன் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது துறைசார் அதிகாரிகள், மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து முகத்துவாரம் அகலும் பணியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |













இந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட்.. குடும்பத்துடன் வந்த பிரபலம், வீடியோ Cineulagam

இந்த ராசியில் பிறந்தவங்க இறக்கும் வரை பணக்காரர்களாக இருப்பார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
